ராமராஜன் வைத்த கோரிக்கை! சாமானியன் படத்துக்கு கிடைச்ச வெற்றி

by rohini |   ( Updated:2024-10-15 15:32:28  )
samaniyan
X

samaniyan

தமிழ் திரையுலகில் மக்கள் கலைஞனாக ஜொலிப்பவர் நடிகர் ராமராஜன். கிராமத்து நாயகன் என்று சொல்லலாம். தான் நடிக்கும் படங்களில் நம் நாட்டின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் எந்தவிதத்திலும் பாதிக்காதவாறு படத்தின் காட்சிகள் இடம்பெற வேண்டும் என கவனமாக இருப்பார். எம்ஜிஆரை போலவே ராமராஜனும் புகைப்பிடிப்பது, மதுஅருந்துவது போன்ற காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

ஏன் இரண்டு மனைவிகள் கொண்ட கணவன் என்ற கதாபாத்திரத்தில் கூட நடிப்பதை தவிர்த்திருக்கிறார் ராமராஜன். இப்படி தன்னால் ரசிகர்கள் எந்தவிதத்திலும் கெட்டுப் போகக் கூடாது என்பதில் அக்கறைக்காட்டக் கூடியவர் ராமராஜன். அவரின் நடிப்பில் நீண்ட வருடங்களுக்கு பிறகு கடந்தாண்டு ரிலீஸான திரைப்படம் சாமானியன். இளையராஜாவின் இசையில் அமைந்தப் படம் மக்களை திருப்திபடுத்தும் என நினைத்தார்கள்.

ஆனால் எதிர்பார்த்த வெற்றியை படம் பதிவு செய்யவில்லை. ஆனால் ஒரு ஊரில் மட்டும் சாமானியன் திரைப்படம் 118 நாள்கள் கடந்து ஓடியதாம். ஆலங்குள்த்தில் உள்ள ஒரு தியேட்ட்டரில் ராமராஜனே நேரில் போய் படத்திற்கான கட்டணத்தை 50 ரூபாய்க்கு விற்க சொன்னதாகவும் விற்கப்பட்டும் ஸ்நேக்ஸ்களையும் மிகக் குறைவான விலையில் கொடுக்க சொல்லியும் கோரிக்கை வைத்தாராம்.

மேலும் நாள் ஒன்றுக்கு ஒரு ஷோ வீதத்தில் சாமானியன் படத்தை ஓட்ட சொன்னாராம் ராமராஜன். அந்த தியேட்டர் ஒனர் ஏற்கனவே ராமராஜனின் தீவிர ரசிகராம். அதனால் ராமராஜன் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவ்வாறே செய்திருக்கிறார். அதனால் படம் 118 நாள்கள் ஓடியதாம்.

அந்த வெற்றியை அதே தியேட்டரில் கேக் வெட்டியும் கொண்டாடியிருக்கிறார்கள். அந்த கொண்டாட்டத்தில் இளையராஜாவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story