ரொமான்ஸ் அள்ளுதே!.. பேங்காகில் கணவருடன் ஜாலி பண்ணும் ரம்யா பாண்டியன்...
Ramya pandiyan: நடிகர் அருண் பாண்டியனின் உறவினர்தான் ரம்யா பாண்டியன். குடும்பம் மற்றும் உறவினர்களில் பலரும் சினிமாவில் இருந்ததால் ரம்யாவுக்கும் மாடலிங் மற்றும் நடிப்பின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. ஜோக்கர் என்கிற படத்தில் அறிமுகமானார். அதன்பின் சில படங்களில் நடித்தாலும் அவை சரியாக அமையவில்லை.
அதன்பின் தாவணி பாவாடை அணிந்து மொட்டை மாடையில் இடுப்பழகை காட்டி ரம்யா வெளியிட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி அவருக்கு ரசிகர்களும் உருவானார்கள். ஒரே நாளில் பிரபலமாகிவிட்டதால் தனக்கு சினிமா வாய்ப்பு வரும் என காத்திருந்தார்.ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.
எனவே, விஜய் டிவி பக்கம் போனார். குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் பல நாட்கள் இருந்தும் அவரால் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை. மம்முட்டிக்கு பெயர் வாங்கி கொடுத்த நண்பகல் நேரத்து மயக்கம் படத்திலும் ரம்யா நடித்திருந்தார்.
ஆனாலும், சரியான வாய்ப்புகள் இல்லை என்பதால் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார். யோகா மாஸ்டர் லாகல் தவான் என்பவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் இந்து முறைப்படி ரிஷிகேஷில் நடந்தது. இந்நிலையில், கிறிஸ்துமஸை கொண்டாட கணவருடன் பேங்காக் சென்றிருக்கிறார் ரம்யா. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.