நீலாம்பரி, ராஜாமாதா வரிசையில் அடுத்த டெரிபிளான லுக்! மிரட்டும் ரம்யாகிருஷ்ணன்
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பேசப்படும் நடிகையாக இருப்பவர் நடிகை ரம்யாகிருஷ்ணன். தமிழில் 90களில் பல படங்களில் நடித்திருந்தாலும் குஷ்பூ, மீனா, ராதிகா இவர்களை போல் முன்னணி ஹீரோயின் என்ற அந்தஸ்தை அவரால் பெறமுடியவில்லை. ஆனாலும் தொடர்ந்து தன்னுடைய முகத்தை காட்டி வந்தார். சிறு சிறு வேடங்கள், ஒரு பாடலுக்கு நடனம் என தன்னுடைய முகம் சினிமாவில் தெரிய வேண்டும் என முயற்சித்து வந்தார்.
இன்னொரு பக்கம் தெலுங்கில் இவருடைய மார்கெட் ஓரளவு இருந்து வந்தது. இப்படியிருக்கும் சூழ்நிலையில்தான் படையப்பா படத்தில் ரஜினிக்கே வில்லியாக நடித்து மாஸ் காட்டினார். ரஜினியை அடக்க ரகுவரன், ஆனந்த்ராஜ் போன்ற வில்லன்களால் மட்டும்தான் முடியும் என்ற எண்ணத்தை சுக்கு நூறாக்கினார் ரம்யா கிருஷ்ணன். அப்படிப்பட்ட ஒரு நெக்ட்டிவ் ரோலில் நடித்து ரஜினிக்கே டஃப் கொடுத்தார்.

படையப்பா படத்தில் ரஜினியும் ரம்யாகிருஷ்ணனும் சந்திக்கும் காட்சியை பார்க்கும் போது திரையே கிழியும் மாதிரியான ஒரு வைப் தோன்றியது. இதை பற்றி ஒரு மேடையில் ரஜினியே சொல்லியிருப்பார். என்னுடைய சிறந்த இரண்டு வில்லன்கள் என்றால் ஒன்று ரகுவரன் இன்னொருவர் ரம்யாகிருஷ்ணன் என கூறியிருப்பார். படையப்பா படத்திற்கு பிறகுதான் ரம்யாகிருஷ்ணனை தமிழ் ஆடியன்ஸ் திரும்பி பார்க்க ஆரம்பித்தனர்.
அதன் பிறகு குணச்சித்திர கேரக்டர்களில் நடிக்க தொடங்கினார். குறிப்பாக பாகுபாலி படத்தில் ராஜமாதாவாக அவர் அரங்கேற்றிய அந்த நடிப்பு இன்றுவரை யாராலும் மறக்கமுடியாது. அவருக்கு பிளஸே அவருடைய கண்கள்தான். தன் சுட்டெரிக்கும் கண்களால் மொத்தத்தையும் எரித்துவிடக்கூடியவர் ரம்யாகிருஷ்ணன். ஒரு ஸ்ட்ராங்கான , தைரியமான , எதையும் எதிர்க்கும் விதமான கேரக்டர் என்றால் அது ரம்யாகிருஷ்ணனுக்கு சரியாக பொருந்தும்.
இந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தின் போஸ்டர் லுக் வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால்வர்மா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார் ரம்யாகிருஷ்ணன். நேற்று முகம் தெரியாத ஒரு போஸ்டரை சம்பந்தப்பட்ட படக்குழு வெளியிட்டது. நேற்றே பல பேர் அது ரம்யாகிருஷ்ணன் தான் என யூகித்தனர். இன்று முழு போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

துணிச்சலான, மாறுபட்ட ஒப்பனை, கழுத்தில் வித்தியாசமான ஆபரணங்களுடன் அவருடைய மேல் நோக்கிய பார்வை பார்க்கும் ரசிகர்களுக்கு பிரமிப்பாக இருக்கிறது. எந்த மாதிரியான கேரக்டர் என்பது பற்றி இன்னும் சரிவர தெரியவில்லை. அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்தப் படத்தை வௌவ் எமிரேட்ஸ் மீடியாஸ் மற்றும் கர்மா மீடியா எண்டெர்டெயிண்ட்மெண்ட் இணைந்து தயாரிக்கிறார்கள்.
