1. Home
  2. Cinema News

SK26: வெயிட் பண்ணியும் வீணாப்போச்சே!… எஸ்.கே.வின் அடுத்த படத்தில் ராஷ்மிகா இல்லையாம்!…

SK26: வெயிட் பண்ணியும் வீணாப்போச்சே!… எஸ்.கே.வின் அடுத்த படத்தில் ராஷ்மிகா இல்லையாம்!…

Rashmika Mandana: சிவகார்த்திகேயனின் புதிய படத்தை யார் இயக்கப் போகிறார் அல்லது அந்த படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என முடிவெடுப்பதற்கு முன்பு வரை பல குழப்பங்கள் நடந்தது. அமரன் படத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்திருந்தார் சிவகார்த்திகேயன். அதேபோல் டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார்.

அமரன், மதராஸி ஆகிய படங்களுக்கு பின் சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருக்கிறது.
பராசக்தி திரைப்படம் ஜனநாயகனுக்கு போட்டியாக 2026 பொங்கலுக்கு வெளியாக வருகிறது.

இந்த படத்திற்கு பின் எஸ்.கே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறாரா இல்லை சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கிறாரா என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. ஒரு கட்டத்தில் சிபி சக்கரவர்த்திக்கும், எஸ்.கே.வுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட சிபி சக்கரவர்த்தி விட்டுவிட்டு குட் நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகரை அழைத்து அவர் இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டார் சிவகார்த்திகேயன். ஆனால் அந்த படத்திற்கு பைனான்ஸ் செய்ய ஒப்புக் கொண்டிருந்த பைனான்சியர் சிபி சக்கரவர்த்தி இயக்கினால் மட்டுமே நான் பணம் கொடுப்பேன் என சொல்லிவிட மீண்டும் அவரையே தற்போது கொண்டு வந்திருக்கிறார்கள்.

SK26: வெயிட் பண்ணியும் வீணாப்போச்சே!… எஸ்.கே.வின் அடுத்த படத்தில் ராஷ்மிகா இல்லையாம்!…

இந்தத் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவிடம் பேசி வந்தார்கள். அவரும் நடிக்க சம்மதம் சொல்லி இருந்தார். இன்னும் சொல்லப்போனால் ராஷ்மிகா மந்தனாவுக்காக இந்த படத்தின் வேலையிலேயே பல மாதங்கள் தள்ளி வைத்தார்கள். ஆனால் சமீபத்தில் நடிகர் விஜய தேவரகொண்டாவுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் திருமணமும் நடக்கவிருக்கிறது. எனவே சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க தேதிகள் கொடுக்க முடியாது என்பதால் அந்த படத்திலிருந்து ராஷ்மிகா விலகிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

எனவே ஆந்திராவிலிருந்து ஸ்ரீலீலாவை இந்த படத்திற்காக கொண்டு வந்திருக்கிறார்கள். பராசக்தி படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் சிபி சக்கரவர்த்தி, எஸ்.கே இணையும் புதிய படத்தின் பட வேலைகள் துவங்கவிருக்கிறது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.