ரிட்டயர்ட் ஆக ரெடி!.. இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரே ராஷ்மிகா மந்தனா!.. காரணம் இதுதான்!..
Rashmika Mandanna: கர்நாடகாவில் பிறந்து வளர்ந்து கன்னட படங்களில் நடிக்க துவங்கி தெலுங்கு சினிமா பக்கம் போய் அங்கு முன்னணி நடிகையாக மாறி இப்போது பாலிவுட்டுக்கும் போய் நேஷனல் கிரஸ்ஸாக மாறியிருப்பவர்தான் ராஷ்மிகா மந்தனா. இவரின் கீதா கோவிந்தம் படம் தெலுங்கில் வெளியானாலும் தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றது.
அந்த படம் மூலம்தான் ரசிகர்களிடம் ராஷ்மிகா பிரபலமானர். விஜய தேவரகொண்டாவுடன் தொடர்ந்து சில படங்களில் நடித்தார். அப்போது இவர்களுக்கு இடையே காதல் உண்டானதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. தெலுங்கில் மகேஷ்பாபு உள்ளிட்ட பலருக்கும் ஜோடி போட்டு நடித்து நம்பர் ஒன் நடிகையாக ராஷ்மிகா மாறினார்.
தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தில் நடித்தார். அதன்பின் விஜயுடன் வாரிசு படத்தில் நடித்தார். விஜய் - ராஷ்மிகா ஜோடி திரையில் பார்ப்பதற்கே அழகாக இருந்தது. அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா ஜோடி போட்டு நடித்த புஷ்பா மற்றும் புஷ்பா 2 ஆகிய இரண்டு படங்களும் தமிழ், ஹிந்தி மொழிகளிலும் ஹிட் அடித்து ராஷ்மிகாவை நேஷனல் கிரஸ்ஸாக மாற்றிவிட்டது.
அதிலும் புஷ்பா 2 திரைப்படம் 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துவிட்டது. கடந்த 2 வருடங்களாக பாலிவுட் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் ராஷ்மிகா. ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அவர் நடித்த அனிமல் படமும் வெற்றி பெற்றது. அமிதாப்பச்சனுடன் குட்பை என்கிற படத்திலும் நடித்திருந்தார்.
மேலும், சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை விவரிக்கும் ‘ச்சவா’ என்கிற படத்தில் சிவாஜியின் மனைவியாக நடித்திருக்கிறார். இந்த படம் முடிந்து ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. இப்போது இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார் ராஷ்மிகா. மும்பையில் நடந்த புரமோஷன் விழாவில் பேசிய ராஷ்மிகா ‘மராட்டிய ராணியாக நடித்ததில் எனக்கு முழு திருப்தி. இப்போதே ஓய்வு பெற்றாலும் எனக்கு மகிழ்ச்சிதான்’ என கூறியிருக்கிறார்.
நயன்தாராவுக்கு இப்போது மார்க்கெட் இல்லை. திரிஷாவும் விரைவில் சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இப்போது ராஷ்மிகாவும் சினிமாவிலிருந்து ஓய்வு பெற தயார் என சொல்லியிருப்பது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. விஜய் தேவரகொண்டாவுக்கும், ராஷ்மிகாவுக்கும் விரைவில் திருமணம் நடக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது.