Connect with us
rashmika

Cinema News

பல வருட காதல்!.. விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திடீர் நிச்சயதார்த்தம்!.. பின்னணி என்ன?…

Vijay Devarakonda: கன்னட சினிமாவில் நடிக்க துவங்கி அதன்பின் தெலுங்கு சினிமாவுக்கு சென்று ரசிகர்களிடம் பிரபலமாகி தமிழ், ஹிந்தி என கலக்கி பேன் இண்டியா நடிகையாக மாறி நேஷனல் கிரஸ்ஸாகவும் மாறியவர்தான் ராஷ்மிகா மந்தனா. விஜய் தேவரகொண்டாவோடு இவர் நடித்து வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம்தான் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. இருவருக்குமான ஜோடி பொருத்தம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் கீதா கோவிந்தம் மட்டுமில்லாமல் டியர் காம்ரேட் என்கிற படத்திலும் இருவரும் இணைந்து நடித்தனர்.

இந்த படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் மிகவும் ரகசியமாக வைத்திருந்தார்கள். ஆனாலும் மேடைகளில் திருமணத்தை பற்றி கேட்கும் போது தான் காதலில் இருப்பதை மறைமுகமாக இருவருமே கூறி வந்தனர். ஒருபக்கம் இருவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தங்களின் சமூக வலைதளங்களில் பதிவிட்டும் அவ்வப்போது காதலை உறுதிப்படுத்தினார்கள்.

இந்நிலையில்தான் நேற்று ஹைதராபாத்தில் இருவருக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக செய்திகள் கசிந்துள்ளது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. அதோடு 2026 பிப்ரவரி மாதம் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளி வந்திருக்கிறது.

விஜய் தேவரகொண்டாவுக்கு கடந்த சில வருடங்களாகவே ஹிட் படங்கள் அமையவில்லை. கடைசியாக வெளியான கிங்டம் திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால் ராஷ்மிகா நடித்த புஷ்பா 2, அனிமல் போன்ற திரைப்படங்கள் ஆயிரம் கோடி வசூலை தாண்டியது.

கடந்த ஏழு வருடங்களாக ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வந்த நிலையில் இது திருமணம் செய்து கொள்வதற்கான நேரம் என்று முடிவெடுத்ததாக சொல்லப்படுகிறது. ராஷ்மியா மந்தனா கன்னடத்தில் கிரிக் பார்ட்டி என்கிற படத்தில் அறிமுகமானார். இந்த படத்தை காந்தாரா ஹீரோ ரிஷப் ஷெட்டி இயக்கியிருந்தார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரக்‌ஷித் ஷெட்டியுடன் அவருக்கு காதல் ஏற்பட்டு நிச்சயதார்த்தம் வரை சென்றது.

ஆனால் அதன்பின் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு அந்த திருமணத்தை ராஷ்மிகா நிறுத்திவிட்டார். அதன்பின் விஜய் தேவரகொண்டாவுடன் காதல் ஏற்பட்டு தற்போது இருவரும் திருமண வாழ்க்கையில் இணையவுள்ளனர். அவர்களுக்கு ரசிகர்களும், தெலுங்கு சினிமா உலகமும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Continue Reading

More in Cinema News

To Top