கிளிய இப்படி கூண்டுல அடச்சிட்டீங்களே?.. நேஷனல் கிரஸ்க்கு இப்படி ஒரு நிலைமையா?..

காலில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் ராஷ்மிகா மந்தனா ஏர்போர்ட்டுக்கு வீல் சேரில் வந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கிரிக் பார்ட்டி என்கின்ற கன்னட திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமான இவர் அதன் பிறகு தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக மிகப் பிரபலமானார்.
இந்த திரைப்படத்தில் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவரை புகழில் உச்சிக்கு கொண்டு சென்று விட்டது. இப்படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து டியர் காம்ரேட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து அடுத்தடுத்து இவர்கள் காம்பினேஷனில் வெளியான திரைப்படங்கள் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்தது.
தமிழில் சுல்தான் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா அதனை தொடர்ந்து விஜயுடன் வாரிசு என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக இருந்து வரும் ராஷ்மிகா அதன்பிறகு ஹிந்தியிலும் கால் பதித்தார். அங்கு இவரது நடிப்பில் வெளிவந்த அனிமல் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
தற்போது புஷ்பா மற்றும் புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்து டாப் நடிகையாக மாறி இருக்கின்றார் ரஷ்மிகா மந்தனா. இந்த திரைப்படம் திரையரங்குகளில் சக்கபோடு போட்டு வருகின்றது. புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுவதும் 1800 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கின்றது. இதில் ஸ்ரீ வள்ளி என்கின்ற கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து தற்போது சாவா என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது தான் வெளியாகி இருக்கின்றது. இப்படம் வரும் 14ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தில் மகாராணி இயேசுபாய் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். இப்படி சினிமாவில் பிஸியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் கால் உடைந்து கட்டுப்போட்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் இன்று விமான நிலையத்திற்கு காரில் வந்த ராஷ்மிகா மந்தனா நொண்டி நொண்டி நடப்பதற்கு சிரமப்பட்டார். பின்னர் அங்கிருந்தவர்கள் சக்கர நாற்காலியை கொண்டு வந்து அவரை அழைத்துச் சென்றனர். இந்த வீடியோவானது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.
ராஷ்மிகா தன்னை யாரும் அடையாளம் காண முடியாத படி முகத்தில் முகமூடி மற்றும் தொப்பி அணிந்து இருந்தார். இருப்பினும் அவரை அடையாளம் கண்ட ரசிகர்கள் அவர் வீல் சேரில் அமர்ந்து சென்றதை வீடியோவாக எடுத்து இணையதள பக்கங்களில் வைரலாகி வருகிறார்கள். தொடர்ந்து அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் சில ரசிகர்கள் புஷ்பா2 திரைப்படத்தில் வரும் 'வந்துச்சே ஃபீலிங்ஸ்' என்கின்ற பாடலை இந்த காட்சியுடன் ஒப்பிட்டு பதிவிட்டு வருகிறார்கள்.