அல்லு அர்ஜுன் செய்யாததை மூன்று மடங்காக ராஷ்மிகாவுக்கு செஞ்ச சல்மான்கான் .. அடடா!

by Akhilan |
Rashmika mandanna
X

Rashmika mandanna

Rashmika Mandanna: நடிகை ராஷ்மிகா மந்தனா சல்மான் கான் உடன் இணைந்து நடித்ததற்கு அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. முதல்முறையாக தென்னிந்திய திரைப்படம் ஒன்று உலகமெங்கும் வசூல் சாதனை நடத்தியிருக்கிறது. 1700 கோடியை தாண்டி இன்னும் வெற்றி நடை போட்டு வருகிறது.

படத்தில் ஹீரோ அல்லு அர்ஜுனருக்கு 300 கோடி வரை சம்பளமாக கொடுக்கப்பட்டது. ஆனால் நாயகியாக நடித்த ராஷ்மிகா மந்தனாவின் சம்பளம் மூணு கோடி மட்டுமே எனக் கூறப்படுகிறது.

ஆனால் தற்போது ராஷ்மிகா சல்மான்கான் நடிப்பில் உருவாகும் சிக்கந்தர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு புஷ்பா 2வை விட மூன்று மடங்கு அதிகமாக 13 கோடி வரை சம்பளமாக கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சிக்கந்தர் திரைப்படத்தில் முதல்முறையாக சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா. இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் படத்தின் ஷூட்டிங் விரைவில் நிறைவு பெற்றுவிடும் எனக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு ரம்ஜானை ஒட்டி இப்படம் வெளியாகலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சல்மான் கான் உடன் நடித்தது குறித்து ராஷ்மிகா கூறுகையில், நிஜமாக இது கனவு போல தான் இருக்கிறது.

அவர் ரொம்பவே எளிமையான மனிதர். ஷூட்டிங் சமயத்தில் எனக்கு உடல்நிலை சரியில்லாத போது சத்தான ஆகாரம் முதல் சுடுதண்ணி வரை என்னை படக்குழு பார்த்துக் கொள்கிறதா என்பதில் கவனமாக இருந்தார் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Next Story