நானும் ராஷ்மிகாவும் தப்பான லொகேஷன்ல வேலை பார்த்தோம்... தனுஷ் இப்படி போட்டு உடைச்சிட்டாரே!

by SANKARAN |
dhanush, rashmika
X

குபேரா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது தனுஷ் பேசிய பேச்சு அவ்ளோ ரசனையாக இருந்தது. கிட்டத்தட்ட அவரது மாமனார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மாதிரி நிறைய தத்துவ மழையாகப் பொழிந்தார். சந்தோஷம்கறது வெளியே இல்ல. உள்ள தான் இருக்கு. எப்பவுமே நாம நிம்மதியை மட்டும் கடவுள்கிட்ட கேட்டா போதும். அன்பும், செல்வமும் அங்கே தான் இருக்கும். அதனால அதைத் தனித்தனியாகக் கேட்க வேண்டிய தேவையில்லைன்னும் சொன்னார்.

அதே நேரம் இது கலிகாலம். வெறுப்பு ஓங்கி நிற்கிற காலம். இப்படி ஒரு காலகட்டத்துல சேகர் கம்முலா மாதிரி ஒரு ஆளைப் பார்த்தது என் பாக்கியம். சுத்தமான மனுஷன். என் மேல எத்தனையோ நெகடிவிட்டியை வச்சாங்க. எங்க பிரச்சனைன்னாலும் என்னைத் தான் காரணம்னு சொன்னாங்க. ஆனா அப்போ எல்லாம் என்னோட ரசிகர்கள் எனக்கு தீப்பொறியாக இருந்து வழிகாட்டுனாங்க.

எனக்கு 18 வயசா இருக்கும்போது யாரும் எனக்கு வழிகாட்டல. கையைப் புடிச்சிக் கூட்டிட்டுப் போகல. சிலர் பொல்லாதவன் மாதிரி பண்ணச் சொல்வாங்க. சிலர் ஆடுகளம் மாதிரி பண்ணச் சொல்வாங்க. சிலர் உத்தமபுத்திரன் மாதிரி பண்ணச் சொல்வாங்க. என் ரசிகர்களை அழகா குழப்பி வச்சிருக்கேன். எங்கிட்ட இருந்து எப்போ என்ன வரும்னு அவங்களுக்குத் தெரியும்.

யாரும் இப்படிப் போன்னு நமக்கு வழிகாட்டுறதை விட நமக்கு நம்மளே காட்டுற ரூட் தான் சரியா வரும். எப்போ எல்லாம் நான் குழப்பமா இருக்கேனோ அப்போ மேல இருந்து ஒரு கை வந்து என் கையைப் பிடிச்சிக் கூட்டிட்டுப் போகும். அப்போ ரசிகர்கள் எல்லாம் தீப்பந்தமா இருந்து எனக்கு வெளிச்சம் காட்டுனாங்க. என்னைப் பத்தி எவ்ளோனாலும் வதந்தியைக் கிளப்புங்க. என் ரசிகர்கள் இருக்குற வரை நான் போய்க்கிட்டே இருப்பேன்.

தம்பிகளா கொஞ்சம் தள்ளிப் போய் விளையாடுங்க ராஜா. இங்க இருக்குறவங்க என் ரசிகர்கள் மட்டும் கிடையாது. 23 வருஷமா என்கூட இருக்குற வழித்துணை. என் கம்பெனியன்ஸ். நீங்க சும்மா ஒரு நாலு வதந்தியைப் பரப்பி என்னைக் காலி பண்ண நினைச்சா அதை விட முட்டாள்தனம் எதுவுமே கிடையாது. ஒரு செங்கலைக்கூட ஆட்ட முடியாது என்றார் தனுஷ்.


அந்தப் பேச்சின் இடையே ராஷ்மிகாவைப் பற்றி இப்படி சொன்னார். சின்சியரான ஆக்டர். நானும் ராஷ்மிகாவும் தப்பான லொகேஷன்ல வேலை பார்க்க வேண்டியதா இருந்தது. குப்பையில. குப்பை லாரில. குப்பை கிடங்குல. சாக்கடையில. எல்லா இடத்துலயும் விழுந்து புரண்டுக்கிட்டு இருப்போம். நானும் ராஷ்மிகாவும் தயங்கியபடி மெல்ல சேகர் சார்க்கிட்ட கேட்போம்.

நாங்க தமிழ்ல பேசுவோம். அவரு இங்கிலீஷ்ல சொல்வாரு. நீங்க ரெண்டு பேரும் அப்படியே குப்பை லாரில இருக்கீங்க. குப்பை எல்லாம் உங்க மேல கிடக்கு. குப்பையைத் தள்ளிட்டு அப்படியே மேல வாரீங்கன்னு சொல்வாரு. நாங்க தயங்கி தயங்கி அது ஃபேக் குப்பை தானேன்னு கேட்போம். அவரு இல்ல இல்ல... ரியல் ரியல்னு சொல்வாரு. நாங்க என்னமோ ரியல் குப்பையைப் போட சொன்ன மாதிரி அவரு சொல்வாரு. ஆனா கிரேட் எக்ஸ்பீரியன்ஸ்னு சொன்னார் தனுஷ். அப்போது சேகர் கம்முலாவும் விழுந்து விழுந்து சிரித்தார். ராஷ்மிகாவும் புன்முறுவல் பூத்தார்.

Next Story