சந்தேகம் எங்க இருந்து வந்ததுனு இப்போ தெரியுது! ரவிமோகனின் ரியல் ஃபேஸ் இதுதானா?

ravimohan
RaviMohan: ஐசரி கணேஷ் வீட்டு திருமணம் ஒரு பக்கம் பிரம்மாண்டமாக நடந்தாலும் அதில் கலந்து கொண்டு சமூக வலைதளங்களில் மீண்டும் டிரெண்டிங்காகி இருக்கிறார் நடிகர் ரவிமோகன். அதுவும் பாடகி கெனிஷாவுடன் கைகோர்த்து வந்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் ரவி. சமீபகாலமாக ரவிமோகனுக்கும் அவருடைய மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறு பாடு ஏற்பட்டு விவாகரத்து பிரச்னை போய்க் கொண்டிருக்கிறது.
ஆர்த்தி தன் மீது சந்தேகப்படுவதாகவும் பண விஷயத்தில் மிகவும் கறாராக நடந்து கொள்வதாகவும் தன்னுடைய தரப்பு வாதத்தை முன் வைத்தார் ரவிமோகன். அதுமட்டுமில்லாமல் ஆர்த்தியின் அம்மாவும் சேர்ந்து ரவியை டார்ச்சர் செய்வதாகவும் ஒரு தகவல் வெளியானது. இதற்கு ஆர்த்தி தரப்பில் இருந்து விவாகரத்துக்கு நான் விரும்பவில்லை. பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்றேதான் கூறி வந்தார்.
ஆனால் தொடர்ந்து ஆர்த்திரவி மீதுதான் அனைவரும் தப்பான கண்ணோட்டத்தை முன்வைத்தனர். அதனால் சில காலம் ஆர்த்திரவி மௌனமாக இருந்தார்.இன்னொரு பக்கம் ரவிமோகன் ‘கெனிஷாவை இந்த பிரச்னையில் இழுப்பது சரியில்லை. அவர் என்னுடைய தோழி. அவ்வளவுதான். அவரை பற்றி தவறாக பேசாதீர்கள்’ என்றெல்லாம் கூறினார். இதற்கிடையில் ஐசரி கணேஷ் இல்லத்திருமணத்தில் பகிரங்கமாக ரவிமோகனும் கெனிஷாவும் ஒரே மாதிரியான நிறத்தில் உடை அணிந்து கைகோர்த்தபடி வந்து நின்றனர்.
இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைப் பற்றி வலைப்பேச்சு அந்தணன் கூறும் போது ‘ நான் கூட மிகுந்த நம்பிக்கை வைத்து ஜெயம் ரவி அப்படிப்பட்ட நபர் எல்லாம் கிடையாது என சொல்லியிருந்தேன். ஆனால் ரொம்ப அதிகாரபூர்வமா நம்பகத்தன்மை கொண்ட ஒருவர் நம்மை தொடர்பு கொண்டு பேசினாங்க. என்னவெனில் ஜெயம் ரவி கோவாவில் தங்கி இருந்ததே கெனிஷாவுடன் தான் என்று சொன்னார் ’
‘ இதை கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. யாரோ ஒருவர் பேசினார் என்றால் கிசுகிசு என கடந்துவிடலாம். ரொம்ப முக்கியமான ஒருவர்தான் இதை சொன்னார். அதனால் இதை நாம் நம்ப வேண்டியதாக இருக்கிறது.சந்தேகம் எங்க இருந்து வந்தது என இப்போதான் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு அப்பழுக்கு இல்லாத மனிதராக இருந்து உங்க மேல் சந்தேகம் வருகிறது என்றால் நீங்கள் கோபப்படுவதில் நியாயம் இருக்கிறது ’
ravimohan
‘ ஆனால் உங்க மேலயும் தவற வச்சுக்கிட்டு வீட்ல சந்தேகப்படுறாங்கனு சொன்னால் தவறு என்பது இரண்டு பக்கமும் இருக்கிறது என்பதுதானே அர்த்தம். ரவி விஷயத்தில் அப்படித்தான் நடந்திருக்கிறது. முன்பே ரவியின் இந்த விஷயம் அவர் மனைவிக்கு தெரிஞ்சு அதன் பிறகு ஆர்த்தி சந்தேகப்பட ஆரம்பிச்சாங்களா என்பதை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆக மொத்தம் ஆர்த்தியின் சந்தேகம் ரவியின் சுதந்திரப் போக்கு இரண்டும் சேர்த்துதான் இவ்ளோ பிரச்னையாக மாறியிருக்கிறது.’ என அந்தணன் பேசியிருக்கிறார்.