ரீ ரிலீஸ் அட்டகாசம்..! இன்னும் ஆரம்பிக்கவே இல்ல... அதுக்குள்ள முதலிடம் பெற்ற ரஜினி
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி நாளைக்கு தளபதி படம் ரீ ரிலீஸ் ஆகிறது. அதே போல சூதுகவ்வும் 2, மிஸ் யூ, ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ், மழையில் நனைகிறேன் படங்களும் இந்தவாரம் வெளியாகிறது.
அந்த வகையில் எந்தப் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்று தனியார் நிறுவனம் எடுத்த தற்போதைய கணக்கெடுப்பில் முதல் இடம் பிடித்தது எந்தப் படம்னு தெரியுமா?
ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. சூப்பர்ஸ்டார் ரஜினி, மெகா ஸ்டார் மம்முட்டி இருவரும் இணைந்து நடித்த தளபதி படம் தான். மணிரத்னம் இயக்கிய இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். படத்தில் அத்தனைப் பாடல்களும் அருமை.
குறிப்பாக சுந்தரி கண்ணால் ஒரு சேதி, யமுனை ஆற்றிலே, ராக்கம்மா கையத்தட்டு, காட்டுக்குயிலு ஆகிய பாடல்கள் செம மாஸ். இந்தப் படத்தைப் பார்க்க 2கே கிட்ஸ்களும் ஆவலாக இருப்பதால் தான் ரசிகர்ளின் எண்ணிக்கை இந்தளவுக்கு அதிகரித்துள்ளது.
அதே போல நாளை ரஜினிகாந்த் தனது 74வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார். வழக்கம்போல ரஜினி எஸ்கேப் ஆகி விடுவாரா? ரசிகர்களை சந்திப்பாரான்னு பொறுத்திருந்து பார்ப்போம். 1991 தீபாவளியான நவம்பர் 5 அன்று தளபதி படம் வெளியானது.
அந்த வகையில் படம் வெளியாகி 33 ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும் இன்னும் ரசிகர்கள் மத்தியில் அந்தப் படத்தின் மீதான ஆர்வம் குறையாமல் இருப்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது. அப்படி என்றால் படம் எப்படி இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு 8011 ரசிகர்கள் காத்து இருக்கிறார்கள். அடுத்த இடத்தைப் பிடித்து இருப்பது சூது கவ்வும் 2. இந்தப் படத்தைப் பார்க்க 1071 சதவீத ரசிகர்கள் காத்து இருக்கிறார்கள்.
அடுத்ததாக மழையில் நனைகிறேன் படத்தைப் பார்க்க 986 ரசிகர்களும், மிஸ் யூ படத்தைப் பார்க்க 414 ரசிகர்களும், ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் படத்தைப் பார்க்க 376 ரசிகர்களும், காத்து இருக்கிறார்கள்.
சூதுகவ்வும் முதல் பாகத்தில் விஜய் சேதுபதி நடித்தார். நலன் குமாரசாமி இயக்கியுள்ளார். படம் சூப்பர் டூப்பர்ஹிட் அடித்தது. இரண்டாம் பாகத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ளார். டயலாக் சூப்பராக உள்ளது. எஸ்.ஜே.அர்ஜூன் இயக்கியுள்ளார்.
மிர்ச்சி சிவாவுடன் இணைந்து அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி, பாபி சிம்ஹா, ராதாரவி, ஹரிஷா ஜெஸ்டின், எம்எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை அன்று டிசம்பர் 13ல் ரிலீஸ் ஆகிறது. படம் எப்படின்னு பொறுத்திருந்து பார்ப்போம்.
அதே போல நாளை ரஜினிகாந்த் தனது 74வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார். வழக்கம்போல ரஜினி எஸ்கேப் ஆகி விடுவாரா? ரசிகர்களை சந்திப்பாரான்னு பொறுத்திருந்து பார்ப்போம்.