அனிருத் ஹுக்கும் கான்சர்ட் ரத்தானதற்கு பின்னணியில் இவ்வளவு காரணமா?!...

Aniruth Hukum: தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதன்பின் பல படங்களில் இவர் இசையமைத்தார். இவரின் இசையில் வெளிவந்த பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் அடித்தது. குறிப்பாக எதிர் நீச்சல், ரெமோ, டாக்டர், வேலையில்லா பட்டதாரி, மாரி, கோலமாவு கோகிலா, நானும் ரவுடிதான் போன்ற படங்களில் அனிருத் கொடுத்த பாடல்கள் அவரை முன்னணி இசையமைப்பாளராக மாறியது.
இன்னும் சொல்லப்போனால் அனிருத் வந்த பின் ஏ.ஆர்.ரஹ்மானுக்கே மவுசு குறைந்துவிட்டது. நெல்சன், லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன் போன்ற இயக்குனர்கள் தங்கள் படங்களில் அனிருத் மட்டுமே இசையமைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். மாஸ்டர், விக்ரம், லியோ, ஜெயிலர் போன்ற படங்களின் வெற்றிக்கு அப்படத்தில் அனிருத் கொடுத்த பாடல்களும் முக்கிய காரணமாக இருந்தது.
இப்போது கூலி, ஜெயிலர் 2, எல்.ஐ.கே போன்ற படங்களுக்கும் அனிருத்தான் இசை. புதுப்படங்களில் இசையமைக்க கேட்டால் என்னால் முடியாது என சொல்லுமளவுக்கு அவரின் கைவசம் அவ்வளவு படங்கள் இருக்கிறது. சினிமாவில் பிஸியாக இருந்தாலும் ஒருபக்கம் அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளையும் அனிருத் நடத்தி வருகிறார். அவர் நடத்தும் இசை நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடம் அவ்வளவு வரவேற்பு இருக்கிறது.
வருகிற 26ம் தேதி சென்னையில் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடப்பதாக இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கான 30 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் ஓப்பன் ஆகி அரை மணி நேரத்தில் விற்றுவிட்டன. அந்த அளவுக்கு ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அனிருத அறிவித்திருக்கிறார். இதற்கு பின்னணியில் சில காரணங்கள் சொல்லப்படுகிறது.

30 ஆயிரம் டிக்கெட்டுகளும் விற்ற நிலையில் இன்னும் 10 ஆயிரம் டிக்கெட் தேவைப்படும் அளவுக்கு பலரும் அழுத்தம் கொடுக்கிறார்களாம். எனவே, அதே இடத்தில் மேலும் 10 ஆயிரம் பேர் கலந்துகொள்வதற்கான அனுமதியை காவல்துறையிடம் கேட்டிருக்கிறார்கள். ஆனால், ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்தது போல இதிலும் நடந்துவிட்டால் என்ன செய்வது என யோசித்த காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.
அதோடு, இசை நிகழ்ச்சி நடந்தால் அதில் 5 நாட்கள் போய்விடும். அனிருத் இப்போது கூலி, கிங்ஸ்டன் போன்ற படங்களுக்கு பின்னணி இசை அமைத்து வருகிறார். எனவேதான், இத நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கியவர்களுக்கு ஆன்லைனில் ஒரு வாரத்தில் பணம் திருப்பி அளிக்கப்படும் என சொல்லப்பட்டிருக்கிறது. மேலும், நிகழ்ச்சி எப்போது என்கிற தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.