சிம்புவுக்காக ஃபீல் பண்ணி பேசிய வெற்றிமாறன்!.. STR49 டேக் ஆப் ஆனதன் பின்னணி..
STR49: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்தும், நிறைய ரசிகர்களை வைத்திருந்தும் தொடர்ச்சியாக படங்களில் நடிக்காதவர் சிம்பு. தொடர்ந்து இயக்குனர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் ஏதேனும் வகையில் குடைச்சல் கொடுப்பார். இது சிம்புவின் ஸ்டைல்.
பாதி படம் முடிந்த நிலையில்தான் பேதி சம்பளத்தை விட திடீரென அதிகமாக கேட்பார். சில சமயங்களில் சரியான ஒத்துழைப்பு கொடுக்காமல் இருப்பார். டப்பிங் அல்லது ஷூட்டிங் செல்ல மாட்டார். இதனால் படம் அப்படியே நிற்கும். இவரை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் எடுத்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் சிம்பு ஒத்துழைப்பு கொடுக்காமல் எடுத்தவரை எடிட் செய்து வெளியிட்டார்கள். படமும் அட்டார் பிளாப் ஆகி தயாரிப்பாளருக்கு 10 கோடி நஷ்டம். இப்போது வரை அந்த பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது.
சமீபகாலமாக வாலை சுருட்டிக்கொண்டு ‘இனிமேல் என் ரசிகர்களுக்காக நான் நடிப்பேன்.. என்னுடைய படங்கள் தொடர்ந்து வரும்’ என பீலிங்காக பேசினார். மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப் படத்தில் நடித்தார். அதன்பின் அவர் நடிப்பதாக மூன்று படங்கள் அறிவிக்கப்பட்டது. அவரின் 49 வது படத்தை பார்க்கிங் படைய இயக்குனரும், 50வது படத்தை தேசிங்கு பெரியசாமியும், 51வது படத்தை டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவும் இயக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பார்க்கிங் பட இயக்குனர் படம் டேக் ஆப் ஆகவில்லை. எனவே கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்க ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு.
படம் வடசென்னை தொடர்பான கதை என சொல்லப்பட்டு சிம்புவை வைத்து இரண்டு வாரங்கள் புரமோஷன் ஷூட் எடுத்தார். வெற்றிமாறன். ஆனால் அந்த வீடியோ இதுவரை வெளியாகவில்லை. மேலும் சிம்புவும் வெற்றி மாறனும் அதிக சம்பளம் கேட்டதால் இந்த படம் டிராப் ஆனதாக சொல்லப்பட்டது.
ஆனால் சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய வெற்றிமாறன் ‘கண்டிப்பாக சிம்பு படம் விரைவில் அறிவிப்பு வரும்’ என பேசினார். இதற்கு பின்னணியில் என்ன நடந்தது என்பதை இப்போது வெளியே கசிந்திருக்கிறது. இந்த படத்தை விட வெற்றிமாறனுக்கு மனமில்லை. அவர் தனது நண்பர்கள் வட்டாரத்தில் ‘கலைப்புலி தாணு எனது அப்பா மாதிரி.. நான் கேட்ட போதெல்லாம் எனக்கு பணம் கொடுத்தார்.. அதேபோல் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனதும் சிம்பு மணிரத்னத்திடம் சென்று நான் வெற்றிமாறன் சார் படத்தின் நடிக்க போகிறேன் என சொல்லிவிட்டு வந்தார்.. அப்படி இருக்கும்போது இந்த படத்தை கண்டிப்பாக எடுப்பேன்’ என்ன சொல்லி இருக்கிறார்.
அதோடு அவரே சிம்பு, கலைப்புலி தாணு எல்லோரிடமும் சமரசமாக பேசி முடித்து விரைவில் ஷூட்டிங்கை துவங்க திட்டமிட்டுருக்கிறாராம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
