பிரபாஸ் மனதை பாதித்த அந்த விஷயம்!. சிங்கிளா இருக்க காரணம்!.. அவர் அம்மாவே சொல்லிட்டாரே!...

by Murugan |   ( Updated:2025-01-04 08:30:49  )
prabas
X

Actor Prabas: தெலுங்கில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருப்பவர் பிரபாஸ். பாகுபலி படம் வருவதற்கு முன் பிரபாஸும் மற்ற நடிகர்களை போல சாதாரண, சின்ன பட்ஜெட் படங்களில்தான் நடித்து வந்தார். எல்லா தெலுங்கு நடிகர்களையும் போல காதல் கலந்த ஆக்சன் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

ஆனால், பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களும் அவரின் மொத்த வாழ்க்கையையும் மாற்றிவிட்டது. இந்த படத்திற்காக 5 வருடங்களை அர்ப்பணித்தார் பிரபாஸ். பாகுபலி கதாபாத்திரத்தை பக்கா கமர்ஷியலாகவும், மாஸாகவும் அமைத்திருந்தார் அப்படத்தை இயக்கிய ராஜமவுலி.


இந்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து 25 கோடியை மட்டுமே சம்பளமாக பெற்றார் பிரபாஸ். ஆனால், பாகுபலி 2 படம் உலக அளவில் 1800 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் அடித்தது.

பாகுபலி மற்றும் பாகுபலி 2 படத்தின் வெற்றியால் பேன் இண்டியா நடிகராக பிரபாஸ் மாறினார். அவரை வைத்து 500 கோடி வரை செலவு செய்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் முன் வந்தார்கள். சாஹோ, ஆதி புருஷ், சலார், கல்கி, ராதே ஷ்யாம் என பல படங்கள் உருவானது. இதில், கல்கி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. இப்போது பிரபாஸ் மாஸ் ஹீரோவாக மாறிவிட்டார்.


பிரபாஸின் சம்பளம் 200 கோடியை தாண்டியிருக்கும் என சொல்கிறார்கள். ஒருபக்கம், இப்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்து வருகிறார். பாகுபலி படம் வெளியானபோது அனுஷ்காவுக்கும், பிரபாஸுக்கும் இடையே காதல், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளியானது. ஆனால், அதை இருவரும் மறுத்தனர்.

இந்நிலையில், இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய பிரபாஸின் அம்மா ‘பிரபாஸுக்கு ரவி என ஒரு நெருங்கிய நண்பர் இருக்கிறார். அவருக்கு அவரின் திருமண வாழ்க்கை மோசமாக அமைந்துவிட்டது. அது பிரபாஸை மிகவும் பாதித்துவிட்டது. அதனால்தான் திருமணத்தில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார். ஆனாலும், ஒரு நாள் அவர் மனம் மாறுவார் என நம்பி நான் காத்திருக்கிறேன்’ என சொல்லியிருக்கிறார்.

Next Story