இதனாலதான் அதிக சம்பளம் கேக்குறாரா அஜித்?!.. இப்படி ஒரு காரணம் இருக்கா?…
Ajithkumar: நடிகர் அஜித்துக்கு சினிமாவில் நடிப்பது என்பது தொழில் மட்டுமே. பைக் ஓட்டுவது, கார் ஓட்டுவது, கார் ரேஸ்களில் கலந்து கொள்வது, துப்பாக்கி சூடும் போட்டி, ரிமோட் ஹெலிகாப்டர் என அவருக்கு பிடித்தமான விஷயங்கள் நிறைய இருக்கிறது. முதல் படமான அமராவதியில் அவர் கேட்ட 40 ஆயிரம் சம்பளம் கூட சொந்தமாக ஒரு பைக் வாங்கத்தான். பைக், கார் இவை இரண்டின் மீதும் அஜித்துக்கு இருக்கும் காதல் இப்போதும் குறையவில்லை.
கடந்த இரண்டு வருடங்களாக அஜித் கார் ரேஸ்களில் கலந்து கொண்டு வருகிறார். துபாயில் துவங்கிய கார் ரேஸ் இப்போது ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. ஒரு பக்கம் அஜித் தனது சம்பளத்தை 180 கோடியாக உயர்த்தி விட்டார். இத்தனைக்கும் விடாமுயற்சிக்கு அவர் வாங்கிய சம்பளம் 100 கோடி மட்டுமே. இடையில் குட் பேட் அக்லி படம் மட்டும்தான் வெளியானது.
ஆதிக் இயக்கத்தில் அடுத்து நடிக்க உள்ள படத்திற்கு அஜித் 180 கோடி சம்பளம் கேட்க அந்த படத்தை தயாரிக்க யாரும் முன் வரவில்லை. சன் பிக்சர்ஸ், லைக்கா, ஏஜிஎஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் கதவுகளையும் தட்டியும் அது நடக்காமல் போனது. அவர்கள் எல்லோருமே அஜித்தின் சம்பளத்தை குறைக்க சொன்னார்கள். ஆனால் அஜித் விடாப்பிடியாக மறுத்து விட்டார். அதன்பின் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் அதை தயாரிக்க முன் வந்தார்.
ஆனால், ஒரு கட்டத்தில் ராகுலும் இப்படத்தை தயாரிக்க யோசிக்க மாஸ்டர், லியோ ஆகிய படங்களை தயாரித்த லலித்குமாரிடம் பேசினார்கள். அவரும் பட்ஜெட்டை குறைக்க சொன்னார். ஆனால், அஜித் சம்மதிக்கவில்லை. தற்போதே ராகுலே இந்த படத்தை தயாரிப்பது உறுதியாகியுள்ளது.
அஜித்குமார் கார் ரேஸிங் என்கிற பெயரில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார் அஜித். கார் ரேஸில் ஆர்வமுள்ள இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி கொடுத்து உலக அளவில் நடக்கும் கார் ரேஸ்களில் அவர்களை கலந்து கொள்ள வைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த நிறுவனத்தையே அவர் தொடங்கியிருக்கிறார். இதுவரை அந்த நிறுவனத்தில் 60 பேர் வரை சேர்ந்திருக்கிறார்கள்.
அவர்கள் எல்லோருக்கும் பயிற்சி கொடுப்பது, வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வது, அதற்கான விமான டிக்கெட், அவர்களுக்கு தங்கும் வசதி, உணவு என எல்லாவற்றுக்கும் பல கோடிகள் செலவாகும். இந்த எல்லா செலவையும் அஜித்தின் நிறுவனம்தான் ஏற்கிறது. எனவேதான் அஜித் தனது சம்பளத்தை குறைக்க மறுக்கிறார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசுகிறார்கள்.
