அக்கா பையன ஹீரோ ஆக்குனதுக்கு பின்னாடி இவ்ளோ கதை இருக்கா!.. தனுஷ் போட்ட ஸ்கெட்ச்!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தனுஷ். துள்ளுவதோ இளமை படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அண்ணன் செல்வன் கொடுத்த நடிப்பு பயிற்சியில் தன்னை பட்டை தீட்டிக்கொண்டார். காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்களில் நடிப்பின் பல்வேறு பரிமாணத்தை காட்டினார்.

அண்ணன் செல்வராகவனிடம் கற்றுக்கொண்ட சினிமா தனுஷுக்குள் ஒரு இயக்குனரையும் உருவாக்கியது. சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும்போதே நிறைய கதைகளையும் எழுதி அதை அண்ணன் செல்வராகவனிடம் விவாதிப்பது தனுஷின் வழக்கம். அப்படித்தான் பவர் பாண்டி படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கினார் தனுஷ்..

முதல் படத்திலேயே தன்னால் ஒரு படத்தை சிறப்பாக இயக்க முடியும் என நிரூபித்து காட்டினார் தனுஷ். அதன்பின் சில வருடங்கள் கழித்து அவர் துவங்கிய படம்தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படத்தில் தனது அக்கா மகனை கதாநாயகனாக நடிக்க வைத்திருக்கிறார் தனுஷ்.


படம் பாதிக்கும் மேல் முடிந்தவிட்ட நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக ராயன் படத்தை இயக்கி நடிக்க போனார் தனுஷ். மிகவும் குறுகிய காலகட்டத்தில் தனுஷ் இயக்கி நடித்து வெளியான அந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்களும் ஹிட் அடித்தது.

ராயன் வெற்றிப்படமாக அமைந்துவிட்ட சந்தோஷத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் வேலைகலை மீண்டும் துவங்கினார் தனுஷ். ஜிவி பிரகாஷ் இசையில் ஒரு பாடலும் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. இந்த படத்தில் அக்கா மகன் பவிஷை ஹீரோவாக நடிக்க வைத்ததற்கு பின்னணியில் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.

பவிஷ் சினிமாவுக்கு புதியவர் அல்ல. தனுஷ் அசுரன் படத்தில் நடித்தபோது பவிஷ் அந்த படத்தின் படப்பிடிப்பில் எப்போதும் இருப்பாராம். செல்வராகவன் தனுஷை வைத்து இயக்கிய நானே வருவேன் படத்தில் உதவி இயக்குனராகவும் பவிஷ் வேலை செய்திருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் பவிஷ் சுறுசுறுப்பாக வேலை செய்வதை பார்த்த பின்னரே தனுஷ் அவரை ஹீரோவாக நடிக்க வைக்க முடிவெடுத்தார் என சொல்லப்படுகிறது.

Related Articles
Next Story
Share it