ஒருத்தனும் மதிக்கல!. அதனாலதான் இந்த முடிவு எடுத்தேன்!.. பிரதீப் ரங்கநாதன் பேட்டி!...

Pradeep Ranganathan: திரைப்படங்கள் மூலம் ஒரு நடிகர் ரசிகர்களிடம் பிரபலமாவதற்கு பின்னணியில் பலரும் இருப்பார்கள். குறிப்பாக ஒரு ஹீரோவை உருவாக்குவதே இயக்குனர்தான். இயக்குனர் இல்லையென்றால் இங்கே ஹீரோ என யாருமே இல்லை. கதையின் நாயகனை ஹீரோயிசம் செய்ய வைத்து, சண்டை காட்சிகளில் நடிக்க வைத்து அவனை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றுவதும் இயக்குனர்கள்தான்.
ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் கிடைப்பதற்கு பின்னால் பல இயக்குனர்களின் உழைப்பு இருக்கிறது. சினிமாவில் ஹீரோக்களை பில்டப் செய்தே காட்சிகளை அமைப்பார்கள். தெலுங்கு நடிகர் பாலையா படங்களை பார்த்தால் இது நன்றாகவே புரியும். ஆனால், ஹீரோக்களை மட்டுமே ரசிகர்கள் ஆராதிப்பார்கள்.
ஏனெனில், திரையில் பார்ப்பது அவர்களைத்தான். திரைக்கு பின்னால் இருக்கும் இயக்குனர்களை யாரும் கவனிக்க மாட்டார்கள். பாரதிராஜா, பாலச்சந்தர், மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குனர்கள் மட்டுமே ரசிகர்களால் பேசப்பட்டார்கள். அதன்பின் ஏ.ஆர்.முருகதாஸ். லோகேஷ் கனகராஜ், நெல்சன் போன்றவர்கள் பிரபலமானார்கள்.

அந்தவகையில் இயக்குனராக இருந்து நடிகராக மாறியிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். கல்லூரி படிப்பை முடித்தபின் குறும்படங்களை இயக்க துவங்கினார். ஜெயம் ரவியை வைத்து கோமாளி படத்தை இயக்கினார். அந்த படம் வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பின் லவ் டுடே படத்தை இயக்கி நடித்தார். இந்த படமும் வெற்றி.
பிரதீப்பின் நடிப்பை பார்த்தவர்கள் குட்டி தனுஷ் போல இருக்கிறார் என சொன்னார்கள். தற்போது டிராகன் படம் வெளியாகி ஹிட் அடித்திருக்கிறது. 3 நாட்களில் இப்படம் 50 கோடியை வசூல் செய்திருக்கிறது. இப்படம் எப்படியும் 100 கோடி வசூலை தாண்டும் என கணிக்கப்படுகிறது.
இந்நிலையில், என்னுடைய முதல் ஷார்ட் பிலிமை நான் எடுத்தபோது அந்த படத்தில் மணி என்ற ஒருத்தன் நடிச்சிருந்தான். எல்லோரும் அவனை பாராட்டினார்கள். நிறைய பொண்ணுங்க அவன்கிட்ட போய் ‘சூப்பரா இருக்குடா.. செமயா இருக்குடா’ என சொல்லுவாங்க. அவன் பக்கத்துலதான் நான் நின்னுட்டு இருந்தேன். என்னை யாருமே கண்டுக்கல. அப்பதான் டைரக்டரை விட நடிகருக்கு கிடைக்கும் அங்கீகாரம் ரொம்ப ஸ்பெஷல்னு தெரிஞ்சது. அதனாலதான் லவ்டுடே படத்தில் நடித்தேன்’ என சொல்லியிருக்கிறார்.