அஜித் எப்படி இப்படி ஸ்லிம்மாக மாறினார் தெரியுமா?!.. கசிந்த தகவல்!...

by Murugan |   ( Updated:2024-12-16 16:30:37  )
ajith
X

ajith

Ajithkumar: அமராவதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கிய அஜித் படிப்படியாக வளர்ந்து இப்போது முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருக்கிறார். விஜயை போலவே இவருக்கும் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. விஜய் விரைவில் முழுநேர அரசியல்வாதியாக மாறவுள்ள நிலையில் அஜித்துக்கு போட்டியே இல்லை என்கிற நிலை உருவாகியிருக்கிறது.

மற்ற நடிகர்களை போல சினிமா தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் அஜித் கலந்துகொள்ளமாட்டார். அவர் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கும் வரமாட்டார். இவரின் படங்கள் ஓடி வசூலை பெற்றுவிடுவதால் தயாரிப்பாளர்களும் அதை கண்டுகொள்வதில்லை. இது தொடர்பாக கே.ராஜன் போன்றவர்கள் திட்டினாலும் அஜித் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.

சினிமாவில் நடிப்பது பேஷன் என்றாலும் பைக்கில் உலகை சுற்றுவது, கார் ரேஸிலும் கலந்து கொள்வது என அஜித்துக்கு பிடித்த விஷயங்கள் நிறைய இருக்கிறது. இதுபோக, ரிமேட் ஹெலிகாப்டர் இயக்குவது, துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொள்வது என பல விஷயங்களை செய்து வருகிறார்.


துணிவு படத்திற்கு பின் விடாமுயற்சி படத்தில் நடிக்க துவங்கினார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. இந்த படம் 70 சதவீதம் முடிந்திருந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க துவங்கினார்.

விடாமுயற்சி படத்தை விட குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு வேகமாக முடிந்துவிட்டது. இந்த படத்தில் மூன்று விதமான கெட்டப்பில் வருகிறார் அஜித் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இப்படத்தின் கடைசிநாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்துக்கு நன்றி சொல்லி இருந்தார்.

அந்த புகைப்படங்களை பார்த்த பலரும் ஆச்சர்யப்பட்டார்கள். ஏனெனில், அஜித் உடலின் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியிருந்தார். இதற்கு முன் பல வருடங்களுக்கு முன் நான் கடவுள் படத்தில் நடிக்கவே அஜித் உடல் எடையை குறைத்தார். அதன்பின் விவேகம் படத்திற்காக ஜிம்மில் வொர்க் அவுட் செய்து தொப்பையை குறைத்து கொஞ்சம் ஃபிட்னஸ் காட்டினார்.


ஆனால், குட் பேட் அக்லிக்காக சின்ன பையன் போல மாறியிருக்கிறார். இந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்கலில் பகிர்ந்து தங்களின் ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், இந்த தோற்றத்தை கொண்டு வர அஜித் என்ன செய்தார் என்கிற விபரம் வெளியே கசிந்திருக்கிறது.

3 மாதங்களுக்கு முன்பு விடாமுயற்சி படத்தில் நடித்து கொண்டிருந்தபோதே அஜித் அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டாராம். அதன்பின் உணவு கட்டுபாடு, வொர்க் அவுட் என கடைப்பிடித்தே இந்த தோற்றத்துக்கு மாறினார் என சொல்லப்படுகிறது. அஜித்துக்கு முதுகில் செய்யப்பட்ட பல அறுவை சிகிச்சைகளால் அடிக்கடி அவரின் உடல் எடை கூடிக்கொண்டே செல்லும். பல வருடங்களாகவே அவருக்கு இந்த பிரச்சனை இருக்கிறது. இது பலருக்கும் தெரியாது. அதனால்தான் அந்த தோற்றத்திலேயே அஜித் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். அதேநேரம், சினிமாவுக்கு தேவைப்பட்டால் உடல் உடையை குறைத்தும் அவர் ஆச்சர்யப்படுத்தி வருகிறார் என்றே சொல்ல வேண்டும்.

Next Story