இவங்ககிட்ட முடியுமா? வேட்டையன் தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட்

ரஜினி நடிக்கும் வேட்டையன் திரைப்படத்தின் தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமையை ரெட் ஜெயன்ட் கைப்பற்றியதாக லைக்கா நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருக்கிறது. த ச ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, மஞ்சு வாரியர், அமிதாபச்சன், பகத் பாசில், ராணா, துஷாரா விஜயன், ரித்திகா சிங், கிஷோர் என பல சூப்பர் ஹிட் நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படம் தான் வேட்டையன்.

லைக்கா தயாரிப்பில் படம் மிக பெரிய அளவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. தச ஞானவேல் படம் என்றாலே ஒருவித சமூக கருத்துக்களை உள்ளடக்கிய திரைப்படமாகத்தான் இருக்கும் என எதிர்பார்த்திருந்தனர் ரசிகர்கள். ஆனால் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் எண்ணத்தை சுக்கு நூறாக்கியது.

ஞானவேல் படைப்பில் இப்படி ஒரு கமர்ஷியல் படமா என்ற அளவுக்கு வேட்டையன் திரைப்படத்தின் டிரைலர் இருந்தது. ரஜினியை ஜெயிலர் திரைப்படத்தை விட வேட்டையன் திரைப்படத்தில் ஞானவேல் படுமாஸாக காட்டி இருக்கிறார். அதற்கு ஏற்ற வகையில் அனிருத்தின் இசையும் அமைந்திருக்கிறது.

மனசிலாயோ பாடல் இன்றுவரை அனைத்து தரப்பினரையும் ஆட வைத்திருக்கிறது. ரீல்ஸ் போடவும் வைத்திருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்தப் பாடலுக்கு மட்டும் தான் ஐந்து லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் இந்த பாடலுக்கு ரீல்ஸ் போட்டு அவர்களுடைய ஆதரவை கொடுத்திருக்கினர்.

இது ஒரு பெரிய சாதனை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் வேட்டையன் திரைப்படத்தின் தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமையை கைப்பற்றும் முயற்சியில் பல நிறுவனம் ஈடுபட்டது. குறிப்பாக 5 ஸ்டார் செந்தில் அதிக விலைக்கு இதை ஸ்கோர் செய்திருப்பதாக சில தினங்களுக்கு முன் செய்தி வெளியானது.

ஆனால் இந்த படத்தின் தியேட்டர் உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் இப்போது கைப்பற்றியதாக சொல்லப்படுகிறது. பொதுவாக பெரிய நடிகர்களின் படங்களின் விநியோக உரிமை ரெட் ஜெயன்ட் நிறுவனத்திடம் தான் செல்லும். ஆனால் வேட்டையன் திரைப்படத்தில் பல நிறுவனங்களுக்கிடையே போட்டி இருந்தது.





கடைசியாக வழக்கம் போலரெட் ஜெயண்ட் நிறுவனம்தான் இதனுடைய தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமையை கைப்பற்றியதாக சொல்லப்படுகிறது. வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி உலகெங்கிலும் ரிலீசாக இருக்கின்றது. தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என ஒரு பேன்இந்தியா மூவியாக படம் வெளியாக இருக்கின்றது.

rohini
rohini  
Related Articles
Next Story
Share it