ரெட் ஜெயண்ட் உதவியை நாடிய லைக்கா!.. விடாமுயற்சிக்கு விடிவுகாலம் பிறந்துடுச்சே!...

by Murugan |
ரெட் ஜெயண்ட் உதவியை நாடிய லைக்கா!.. விடாமுயற்சிக்கு விடிவுகாலம் பிறந்துடுச்சே!...
X

Vidaamuyarchi: அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் வேலைகள் துவங்கி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. 2024 ஜனவரியில் அஜித்தின் புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. அதன்பின் விக்னேஷ் சிவன் தூக்கப்பட்டு மகிழ் திருமேனி உள்ளே வந்தார். இதுதான் கதை முடிவெடுக்கவே சில மாதங்கள் ஆனது. அந்த கேப்பில் அஜித் பைக்கில் உலகை சுற்றப்போய்விட்டார்.

அவர் திரும்பி வந்ததும் மகிழ் திருமேனியிடம் கதை கேட்டார். ஆனால், அவர் சொன்ன கதையில் அஜித்துக்கு திருப்தி இல்லை. எனவே, 1997ம் வருடம் வெளிவந்த பிரேக் டவுன் படத்தின் கதையை சொல்லி இதை படமாக எடுப்போம் என அஜித் சொல்ல மகிழ் திருமேனியும் சம்மதித்து விடாமுயற்சி என்கிற தலைப்பில் இப்படம் உருவானது.

அதன்பின் இப்படத்தின் படப்பிடிப்பு பல மாதங்கள் நடந்தது. இடையில் பல காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இப்படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியதாக சொல்லப்பட்டது. எனவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கப்போனார் அஜித்.


அந்த படம் இறுதிக்கட்டத்தை எட்டியநிலையில் மீண்டும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. உடலை இளைத்த தோற்றத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி கொடுத்தார் அஜித். அந்த பாடலில் அஜித்தும் திரிஷாவும் நடித்தார்கள். அதோடு படப்பிடிப்பு முடிந்ததாக அறிவிக்கப்பட்டு படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்றார்கள்.

எனவே, இப்படத்தை காண அஜித் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருந்தார்கள். ஏனெனில், அவரின் துணிவு படம் வெளியாகி 2 படங்கள் ஆகிவிட்டது. ஆனால், சில காரணங்களால் விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை என லைக்கா நிறுவனம் அறிவித்து அஜித் ரசிகர்களை அப்செட் ஆக்கியது.

இந்நிலையில், வருகிற பிப்ரவரி 6ம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அதோடு, இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனமே இப்படத்தை ரிலீஸ் செய்வதாக லைக்கா நிறுவனம் அறிவித்திருக்கிறது. லைக்கா நிறுவனம் வெளியிட்டால் வேறு எந்த படமும் அந்த தேதியில் வராது. ஏனெனில், பெரும்பாலான தியேட்டர்களை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். அதோடு, இந்தியன் 2, வேட்டையன் உள்ளிட்ட சில படங்களில் லைக்காவுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை கொடுக்க முடியாததால்தான் பொங்கலுக்கு விடாமுயற்சியை சிலர் வெளியிட அனுமதிக்கவில்லை.

இப்போது ரெட் ஜெயண்ட் உள்ளே வந்திருப்பதால் யாரும் பஞ்சாயத்துக்கு வரமாட்டார்கள். எனவே, எந்த பிரச்சனையும் இன்றி விடாமுயற்சி படம் பிப்ரவரி 6ம் தேதி வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.

Next Story