Connect with us
biggboss

Cinema News

Biggboss:இவனுங்க எல்லாம் தற்குறிங்க! பிக்பாஸ் போட்டியாளர்களின் மொத்த ஜாதகத்தையும் சொல்றாரே

Biggboss:

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. கடந்த 8 சீசன்களாக இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வந்தது. இப்போது 9வது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கிறது. ஏழு சீசன்களாக இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வந்தார். எட்டாவது சீசனிலிருந்து விஜய் சேதுபதி உள்ளே வந்தார். ஆரம்பத்தில் விஜய் சேதுபதியின் தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களிடையே கடுப்பை ஏற்படுத்தியது.

ஆனால் போக போக போட்டியாளர்களை அவர் கையாளும் விதம் வித்தியாசமாக இருந்தது. அதன் பிறகுதான் விஜய் சேதுபதி பிக் அப் ஆனார். இந்த நிலையில் 9வது சீசனையும் விஜய் சேதுபதிதான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை போட்டியாளர்களே வித்தியாசமாக தெரிகிறார்கள். குறிப்பாக தமிழ் பிக்பாஸ் மாதிரியே இல்லை. ஹிந்தி பிக்பாஸ் மாதிரிதான் தெரிகிறது.

தெரியாத முகம், அரைகுறை ஆடை என ஹிந்தி பிக்பாஸை பார்ப்பது போல் இருக்கிறது. இதையெல்லாம் தாண்டி இந்த சீசனில் வந்த போட்டியாளர்கள் சோசியல் மீடியாக்களில் பிரபலமானவர்கள்தான். ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் அவர்களுக்கு நல்ல அபிப்ராயமே கிடையாது. எதுக்கு இவனுங்கள போய் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டிருக்கிறார்கள் என்பதுதான் அனைவரின் கேள்வியாக பார்க்கப்படுகிறது.

எத்தனையோ பேர் திறமை இருந்தும் மீடியாக்கள் முன் வரவில்லை என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு காசுக்காக எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் செய்யும் ஒரு சில பேரை இந்த நிகழ்ச்சிக்குள் வரவழைத்திருக்கிறார்கள். இதைப் பற்றி பிரபல பத்திரிக்கையாளர் உமாபதி காரசாரமாக பேசியிருக்கிறார்.

பலூன் வியாபாரி, வாட்டர் மெலன் போன்றவைகளை விவசாயம் பண்றவன், சாமியார் என இவர்களை அழைத்து வந்திருக்கிறார்கள். சமூகத்தில் எதையெல்லாம் கேடு, கெட்டது என நினைக்கிறோமோ அதையெல்லாம் செய்து பிரபலமானவர்களை கெஸ்ட் என அழைத்துக் கொண்டு வந்து நிகழ்ச்சியை பண்ணும் போது அதை பார்ப்பவர்களுக்கு என்ன தோன்றும். அப்போ நாமும் பிரபலமாக வேண்டுமென்றால் இவர்கள் மாதிரி செய்தால் பிரபலமாகலாம் என்று நினைக்க தோன்றும்.

சர்வதேச கைக்கூலிகளாக மாறக்கூடும். உழைத்து வாழவேண்டும் என்று நினைக்கக் கூடிய சமூகத்தை நாதாரி சமூகமாக மாற்றக் கூடிய நிகழ்ச்சிதான் இது. இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று நம்மால் சொல்ல முடியாது. இருந்தாலும் தற்குறிகளை உருவாக்கக் கூடிய நிகழ்ச்சி. ஏதோ ஏதோ ரீல்ஸ் போட்டு ஃபேமஸ் ஆனவர்களை கூட்டிக் கொண்டு வரும் போது நாமும் எதாவது பண்ணால் என்ன? என்று நமது மூளையை மழுங்கடிக்க கூடிய நிகழ்ச்சியாகத்தான் இது பார்க்கப்படுகிறது.

இதில் ஒரு இயக்குனர் இருக்கிறார். நல்ல இயக்குனர்தான். நாகர்ஜூனாவை வைத்து ரட்சகன் படத்தை எடுத்தாரு. அருமையான டைரக்‌ஷன். காலப்போக்கில் வறுமை அவரை தொற்றிக் கொள்ள ஒரு சீன் படத்துல நடிச்சாரு. அதோட அவருடைய கெரியரே போயிடுச்சு. வறுமையை போக்கிக் கொள்ளத்தான் உள்ளே போய் உட்கார்ந்திருக்கிறார். இடையில் விஜய்க்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அது ஏன்னு தெரியல.

வீட்டிற்கு வந்து அவமானப்படுத்துவது என்பது வேறு. தேடி போய் செருப்படி வாங்குறது இருக்கு இல்லையா? அதைத்தான் இவர் செய்தார். விஜய் இவரை கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் ஒவ்வொரு சேனலாக போய் விஜயை பற்றி பேசி வந்தார் என பிரவீன் காந்தியை பற்றியும் உமாபதி கூறினார்.

Continue Reading

More in Cinema News

To Top