1. Home
  2. Cinema News

காந்தாரா ஹீரோவுக்கு இது தேவையா?… வாயை விட்டு இப்படி மாட்டிக்கிட்டாரே!..

காந்தாரா ஹீரோவுக்கு இது தேவையா?… வாயை விட்டு இப்படி மாட்டிக்கிட்டாரே!..

Kantara Chapter 1: கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து 2022ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம் காந்தாரா. இந்த படம் கன்னட மொழியில் உருவாகி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்த படம் கர்நாடகாவில் உள்ள காடுகளில் வசிக்கும் பழங்குடியினர், அவர்களின் தெய்வ நம்பிக்கை மற்றும் நம்பிக்கை துரோகம் ஆகியவற்றை பற்றி பேசியது.

இந்த படத்தில் அவர்களின் தெய்வத்தை காட்டியிருந்த விதமும், அதற்கான ஒலியும் ரசிகர்களிடம் வைபை உருவாக்கியது. இதுவே இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. எனவே, இப்படம் தமிழகத்திலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது. மேலும், தெலுங்கு மொழியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது Kantara Chaper 1 படத்தை ரிஷப் ஷெட்டி உருவாக்கியுள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது. இந்த படத்திலும் அவரே ஹீரோவாக நடிக்க ருக்மணி வஸந்த் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படம் சுதந்திரத்திற்கு முந்தைய கால கட்டத்தில் வசித்த ஒரு மன்னன் பற்றிய கதையாகும். ஏற்கனவே இப்படத்தின் டிரெய்லரை பார்த்து இப்படத்தை அதிக விலை கொடுத்து வாங்கிய வினியோகஸ்தர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.

காந்தாரா ஹீரோவுக்கு இது தேவையா?… வாயை விட்டு இப்படி மாட்டிக்கிட்டாரே!..
#image_title

ஏனெனில் இப்படம் முதல் பாகம் போல இல்லை. எனவே, கல்லா கட்டுமா? என்கிற கலக்கம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில்தான் தேவையில்லாததை பேசி படத்திற்கு மேலும் ஆப்பு வைத்திருக்கிறார் ரிஷப் ஷெட்டி. இப்படத்தின் தெலுங்கு புரமோஷன் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தது. அதில், சிறப்பு விருந்தினராக ஜூனியர் என்.டி.ஆர் கலந்துகொண்டார்.

அந்த மேடையில் பேசிய ரிஷப் ஷெட்டி தெலுங்கில் பேசாமல் கன்னடத்தில் பேசினார். மேலும், ‘நான் சொல்வது புரியவில்லை எனில் ஜூனியர் என்.டி.ஆர் அதை மொழி பெயர்த்து உங்களுக்கு சொல்வார்’ என சொல்ல தெலுங்கு சினிமா ரசிகர்கள் கடுப்பாகி Boycot kanatara என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்து வருகிறார்கள். ஒருபக்கம், கரூர் சம்பவத்தால் தமிழ்நாட்டில் நடக்கவிருந்த புரமோஷன் நிகழ்ச்சியையும் ரத்து செய்துவிட்டனர். Kantara Chapter 1 கல்லா கட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.