எந்த சூழலிலும் என்னால் வாழ முடியும்... துணிச்சலுடன் சொன்ன ரித்திகா... அதுதான் காரணமாம்!
நடிகைகளில் ஒரு சிலர் தான் நிஜத்திலும் துணிச்சலானவர்களாக உள்ளனர். அவர்களின் கேரக்டர்கள் அப்படி அமைய காரணமே அவர்கள் இருக்கும் சூழல். வாழும் விதம் தான். அவர்களின் துறை சார்ந்தும் இது வேறுபடுகிறது. ஆரம்பத்தில் ஒரு ஸ்போர்ட்ஸ் பர்சனாக இருந்து திரைத்துறையில் நுழைந்தவர் தான் நடிகை ரித்திகா சிங். அப்படி என்றால் துணிச்சல் இருக்கத் தானே செய்யும்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் ரித்திகா சிங். இறுதிச்சுற்று படத்தில் தான் இவர் யார்? எப்பேர்ப்பட்ட நடிகை என்பது ரசிகர்களுக்குத் தெரிய வந்தது. அந்தப் படத்தில் மாதவனுடன் இணைந்து பிரமாதமாக நடித்திருப்பார்.
படத்தில் குத்துச்சண்டைக்காக அவர் எடுக்கும் அத்தனை பயிற்சிகளும், நடிப்பும் பிரமாதமாக இருக்கும். உண்மையிலேயே அவர் ஒரு ஸ்போர்ட்ஸ் பர்சன் என்பதால் அந்தக் கேரக்டர் அவருக்குக் கச்சிதமாகப் பொருந்தியது.
அதன் பிறகு அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. விஜய்சேதுபதியுடன் இவர் ஆண்டவன் கட்டளை என்று ஒரு படத்தில் நடித்துள்ளார். அதுவும் சரியாகப் போகவில்லை.
விஜய் ஆண்டனியுடன் கொலை, மழை பிடிக்காத மனிதன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். குரு என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இப்போது சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தில் நடித்துள்ளதால் பெரிய அளவில் இவர் அடுத்த ரவுண்டு வருவார் என்று தெரிகிறது.
இந்நிலையில் தற்போது துணிச்சலாக ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா...
நான் ஸ்போர்ட்ஸ் பர்சன் என்பதால் எங்கு சென்றாலும் அந்த இடத்திற்கு ஏற்றவாறு என்னால் வாழ முடியும். என்னால் 7 ஸ்டார் ஓட்டலிலும் வாழ முடியும். அதே போல் குப்பைகள் சூழ்ந்த இடத்திலும் என்னால் வாழ முடியும்.
இறுதி சுற்று படத்திற்காக நொச்சிக்குப்பத்தில் சூட்டிங் நடக்கும்போது அங்கே இருந்த சின்ன சின்ன வீடுகளில் நான் தூங்குவேன். சாப்பிடுவேன். அதெல்லாம் எனக்கு ஒரு விஷயமே கிடையாது என்கிறார் ரித்திகா.