போலீஸ் கூட ரஜினியை லவ் பண்றாங்கப்பா... ரித்திகாவை ஆச்சரியப்பட வைத்த சூப்பர்ஸ்டார்..!
சூப்பர்ஸ்டார் ரஜினி என்றாலே அவரைப் பிடிக்காதவர்களே யாரும் இருக்க முடியாது. அந்தளவு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களின் மனதிலும் ஆழப்பதிந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். அதை உறுதிப்படுத்தும் வகையில் நடிகை ரித்திகா சிங் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...
ஒருவாட்டி கடப்பாவில் சூட்டிங் முடிச்சி திரும்பினேன். செட்ல இல்லை. அப்போ நாங்க ரியாலிட்டி ப்ரண்ட்ஸா இருப்போம். கேமரா ஆப்ல தான இருக்கு. அதனால நாங்க அப்படித்தான் இருப்போம். ரஜினி சார் கூட ஒரே பிளைட்ல வருவேன்னு எனக்குத் தெரியாது. அவருக்கிட்ட அடியாள்கள் யாருமே இல்லை. மேனேஜர் மட்டும் தான். சின்ன டீம் தான் கூட வர்றாங்க. அவருக்கு பாதுகாப்பு கொடுக்குற கடமை போலீஸ்கிட்ட தான் இருக்கு.
ஆனா அவங்க ரஜினி சாரை எவ்ளோ லவ் பண்றாங்க. பேன்பாய்ஸ் மூவ்மெண்ட் எவ்வளவு கொடுக்குறாங்க? நான் இன்டிகோ ஏர்பஸ்ல ஏறும்போது கூட்டமே இல்லை. ஆனா அவரு ஏறும்போது எங்கிருந்து தான் கூட்டம் வந்ததுன்னு தெரியல. 15, 17 வயசு பசங்க எல்லாம் வர்றாங்க. அவங்க எல்லாரும் ரஜினி சாரை சுற்றி நிக்கிறாங்க. போட்டோ எடுக்குறாங்க. பேசுறாங்க. ஆனா ரஜினி சார் ஒரு நொடி கூட எரிச்சல் படவில்லை.
எல்லாரையும் பார்த்து சிரித்த முகமாக பொறுமையுடன் நின்று கொண்டு இருக்கிறார். இவ்வாறு அவர் ஆச்சரியம் பொங்க தெரிவித்துள்ளார். வேட்டையன் படத்தில் ரஜினியுடன் இணைந்து ரித்திகா சிங் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த் என்கவுண்டர் செய்யும் போலீஸ் அதிகாரியாக வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். பாடல்களில் மனசிலாயோ ஹிட் அடித்துள்ளது. படம் வரும் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டுள்ளனர். படத்தை ஜெய்பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார்.
தற்போது ரஜினி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். படத்திற்கான ஆடியோ லாஞ்சில் மாஸான ஸ்பீச் கொடுத்து இருந்தார் ரஜினி. இந்நிலையில் படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.