Karuppu: கருப்பு படத்தால் இப்படி கடுப்பாயிட்டாரே!… அந்த நடிகரிடம் போன ஆர்.ஜே.பாலாஜி!…
Karuppu: ரேடியோ தொகுப்பாளராக இருந்து சுந்தர்.சி கேட்டுக் கொண்டதால் அவர் இயக்கிய தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடிக்கப் போனவர்தான் ஆர்.ஜே.பாலாஜி.
சினிமா துறை அவருக்கு பிடித்துப் போக அதையே தனது முழு நேர வேலையாக மாற்றினார். திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். பெரும்பாலும் கதாநாயகனின் நண்பனாக வருவார். விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதி நண்பனாக படம் முழுக்க வரும் வருவார்.
ஒரு கட்டத்தில் LKG படம் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கினார். அந்த படம் ஹிட் அடிக்கவே தொடர்ந்து மூக்குத்தி அம்மன் படத்தை அவரே இயக்கி நடித்தார். இந்த படமும் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் வீட்ல விசேஷங்க, ரன் பேபி ரன், சிங்கப்பூர் சலூன், சொர்க்கவாசல் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார்.
தற்போது சூர்யாவை வைத்து படம் இயக்கம் அளவுக்கு முன்னேறி விட்டார். சூர்யா, திரிஷா ஆகியோரை வைத்து கருப்பு என்கிற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த படத்தின் ஓடிடி உரிமை இதுவரை விற்கப்படாததால் படம் கிடப்பில் கிடக்கிறது. அதோடு இன்னும் பத்து நாட்கள் படப்பிடிப்பும் பாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஷூட்டிங்கில் திரிஷாவுக்கு, பாலாஜிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் திரிஷா வந்தால் மட்டுமே ஷூட்டிங் முடியும் என சொல்கிறார்கள். ஒரு பக்கம் தயாரிப்பாளருக்கும். பாலாஜிக்கும் இடையேயும் பிரச்சனை என்பதால் சூர்யா அடுத்தடுத்த படங்களில் நடிக்க போய்விட்டார்.
கருப்பு படத்தை எப்போது முடித்து போஸ்ட் புரடெக்ஷன் போன்ற பணிகளை முடித்து ரிலீஸுக்கு தயார் செய்வது என யோசித்த பாலாஜி ஒரு இடத்தில் கடுப்பாகி கருப்பனை விட்டுவிட்டு குட் நைட் மணிகண்டனிடம் ஒரு கதை சொல்லி சம்மதம் வாங்கி இருக்கிறார். அனேகமாக மணிகண்டன் நடிக்கும் அடுத்த படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
