
Cinema News
விஜயகாந்த் – ராவுத்தர் பிரிவு!.. வெளியில் வராத உண்மைய சொன்ன ஆர்.கே.செல்வமணி
Published on
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த். ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் உச்சம் தொட்டார். ஒரு துறையில் மேலே வந்த எந்த ஒரு நபருக்கு பின்னாடியும் ஏதோ ஒரு ஆண் அல்லது பெண் துணையாக நிற்பார். அப்படி விஜயகாந்துக்கு நிழலாய் நின்று அவரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்றவர் இப்ராஹிம் ராவுத்தர். தமிழ் சினிமாவில் இவர்களைப் போல ஒரு நண்பர்களை யாரும் பார்க்க முடியாது.
ஆனால் அப்படிப்பட்ட நண்பர்களே ஒரு காலகட்டத்தில் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஆர்.கே.செல்வமணி சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜயகாந்த்-ராவுத்தர் பிரிவுக்கான காரணத்தை கூறியுள்ளார் அதில், ”விஜயகாந்த் அவர் மனைவியை விட உற்றார் உறவினர்களை விட அதிகம் நேசித்த நபர் இப்ராஹிம் ராவுத்தர். கேப்டன் பிரபாகரன் படத்தின் கதையை விஜயகாந்த் சாரிடம் சொல்லும் பொழுது என்ன செல்வமணி இது சப்புன்னு இருக்கு என்று சொன்னார். அருகில் இருந்த இப்ராஹிம் ராவுத்தர் டேய் போடா இது கரெக்டா இருக்கும் அப்படின்னு ஒரே வார்த்தையில் ஓகே பண்ணிட்டாரு”.
”படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அதன் பிறகு புலன் விசாரணை கதை சொல்லும் போது விஜயகாந்த் சார் ராவுத்தர் கிட்ட ஒரு தடவை கதை சொல் என்று தனது நண்பர் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார். அப்படி இருக்கையில் அவர்கள் இருவருக்கும் இடையில் என்ன பிரச்சனை என்பது ரொம்ப பர்சனல் அதை வெளியில் சொல்ல முடியாது. இருந்தாலும் விஜயகாந்த் சார் மீது 100% தவறு இல்லை. ராவுத்தர் மீதுதான் தவறு இருக்கிறது. சின்ன சின்ன வருத்தங்கள் இருவருக்கும் இடையில் இருந்தது அது ஒரு காலகட்டத்தில் பூதாகரமாக வெடித்து விட்டது”.
”நான் அவர் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன் சந்தித்தேன். என் கையை இறுக்கப் பிடித்துக் கொண்டு அழுது கொண்டே இருந்தார். அந்த மாதிரி ஒரு மனிதனுக்கு இப்படி நேர்ந்தது எனக்கு கடவுள் மீது கூட நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. யாருக்கும் தீமையே பண்ணாத ஒரு நபர் என்றால் அது விஜயகாந்த் சார். எங்க அப்பாவ நினைச்சா கூட எனக்கு அவ்வளவு பீல் ஆகாது. ஆனா விஜயகாந்த் சார் நினைச்சா என் கண்ணுல தண்ணி வரும். கேப்டன் பிரபாகரன் படம் பண்ணும் போது அதற்கு முன் விஜயகாந்த் சாருக்கு ஒன்பது படங்கள் ஓடவில்லை”.
”அதனால் இந்த படத்திற்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா? என்று எல்லோரும் சொன்னார்கள். விஜயகாந்த் சார் இடத்தில் வேறு யாராவது இருந்தால் கண்டிப்பாக என்னை தூக்கிப் போட்டு இருப்பாங்க. இடையில மூணு மாசம் படம் நின்னு போச்சு. வேற டைரக்டர் வச்சி படம் எடுக்கலாமா? என்று சொன்னார்கள். ஆனால் விஜயகாந்த் சார் தான் ஒரு பையன் வாழ்க்கையை நாம கெடுக்க கூடாது. எப்படியோ பண்ணி முடிச்சிடுவோம் என்று சொன்னாரு. இது எல்லாம் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலீஸ் ஆகியிருக்கு நிச்சயமா இன்னைக்கு வர்ற படங்களை விட இந்த படம் சிறப்பாக இருக்கும்”. என்று கூறியுள்ளார்.
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...
STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது....
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் அடித்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்கே...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் ஒரு தீவிரமான அஜித் ரசிகர். திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக...
Karuppu Movie: சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக...