மன்சூர் அலிகான் பளார்னு ஒரு அறை விட்டாரு.. இதுவரை வெளிவராத உண்மையை சொன்ன ஆர்.கே.செல்வமணி
விஜயகாந்தின் 100வது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் படத்தை ஆர்கே செல்வமணி இயக்கியீருந்தார். எந்த ஒரு ஹீரோவுக்கும் 100 வது படம் என்பது மிகப்பெரிய தோல்வி படமாக தான் அமைந்த வரலாறு இருக்கிறது. ஆனால் விஜயகாந்த் மட்டும் தான் நூறாவது படம் பட்டித் தொட்டியெங்கும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்நிலையில் கேப்டன் பிறந்த நாளை ஒட்டி இந்த படம் 4k தொழில்நுட்பத்துடன் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இதன் ரீ-ரிலீஸ் இவன்ட்டில் இந்த படத்தைப் பற்றிய பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார் ஆர்.கே.செல்வமணி. மேலும் அவர் கூறியதாவது ," என் வாழ்க்கையில் எப்படி எனக்கு தாய் தந்தை முக்கியமோ திரைப்படத்துறையில் என்னுடைய பெற்றோர் விஜயகாந்த் சார்தான். கேப்டன் பிரபாகரன் படத்தில் நாங்கள் முதலில் ஆரம்பிக்கும் போது இது 94 வது திரைப்படமாக தான் இருந்தது. ஆனால் இந்த படத்திற்கான லொகேஷன் சுமார் ஒரு வருடமாக நான் தேடிக்கொண்டிருந்தேன் எங்குமே கிடைக்கவில்லை.
அதற்கிடையில் விஜயகாந்த் சார் சில படங்களை முடித்து விட்டார். அதன் பிறகு இதற்கு பிரம்மாண்டமாக செலவு செய்வதை பார்த்து இதை ஏன் விஜயகாந்த் சாருக்கு நூறாவது படமாக பண்ணக்கூடாது என்று என்னிடம் பலர் கூறினார்கள். எனக்கு பயம், ஏற்கனவே படம் லேட்டாகி கொண்டிருக்கிறது. சரி இந்த வாய்ப்பை விட வேண்டாம் என்று சொல்லி நானும் ஒத்துக் கொண்டேன். முதலில் இந்த படத்திற்கு பிரபாகரன் என்று தான் பெயர் வைத்தோம். ஆனால் விஜயகாந்த் சார் இன்னும் ஏதோ மிஸ் ஆகுது என்று சொன்னார்.
அதன் பிறகு ஒரு நாள் கேப்டன் பிரபாகரன் என்ற டைட்டிலை சொன்னேன் உடனே அவருக்கு பிடித்து விட்டது. படத்திற்கு விஜயகாந்த் சார் தான் தயாரிப்பாளர் என்பதால் செலவுக்கு எவ்வளவு கேட்டாலும் கொடுத்துக் கொண்டே இருப்பார். இந்த படத்தில் ஒரு ஆக்ஷன் காட்சியில் 20 அடி உயரத்திலிருந்து ரோப் கட்டாகி கீழே விழுந்தார். நல்ல வேலை அவர் தரையில் விழாமல் ஒரு புதரில் விழுந்தார். எனக்கு அடிபட்டது வெளியில் சொல்ல வேண்டாம் என்றும் அப்படி சொன்னால் ஸ்டன்ட் மாஸ்டர் பயந்து எனக்காக காம்ப்ரமைஸ் செய்து கொள்வார்.
இதை அவரிடம் சொல்லாதே என்று என்கிட்ட சொன்னார். அவருக்கு அன்று பயங்கர வலி.. அதை யார்கிட்டயும் சொல்லாமல் அந்த ஸ்டண்ட் காட்சியை நடித்துக் கொடுத்தார். முதலில் இந்த படத்திற்கு வில்லன் கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகானை நடிக்க வைப்பது எனக்கு விருப்பமில்லை. கடைசியா ஒரு தடவை இவரை வைத்து முயற்சி செய்து பார்க்கலாம் என்று அவருக்கு வீரப்பன் உடை கொடுத்து வீரப்பன் மாதிரி கெட்டப் போட்டு அவரை ரெடி பண்ணினோம்.
இந்த படத்திற்கு காஸ்ட்யூமராக ராஜேந்திரன் பணியாற்றினார். அவர் விஜயகாந்துடன் 100 படங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார். அவர் விஜயகாந்தையே மதிக்க மாட்டார். அப்படி இருக்க மன்சூர் அலிகான் இடம் சென்று ஏதேதோ குண்டக்க மண்டக்க பேசி உள்ளார். மன்சூர் அலிகான் கோபப்பட்டு பளார் என்று ஒரு அறை விட்டு ”யாரு கிட்ட பேசுற..? வீரப்பன் கிட்ட பேசிகிட்டு இருக்க” அப்படின்னு ஒரு டயலாக் விட்டார். அப்போ முடிவு பண்ணிட்டேன் இவர் தான் நம்ம படத்துக்கு வில்லன் என்று.
அதேபோல ஸ்டண்ட் காட்சிகளில் இவருக்கு தெரியாது என்று எதுவுமே சொல்ல மாட்டார். ”அண்ணே, பண்ணிடுவேன்” அப்படின்னு ரொம்ப கஷ்டப்பட்டு நடித்துக் கொடுத்தாரு. மன்சூர் அலிகான் இன்னும் நூறு படங்கள் நடித்தாலும் கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்த வீரபத்திரன் கதாபாத்திரம் போல் இனி இவருக்கு ஒரு கதாபாத்திரம் அமையாது. இவ்வாறு படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி.
