தன் தாயின் இறுதி ஊர்வலத்தில் நடனமாடிய ராபர்ட் மாஸ்டர்! கண்ணே கலங்குது

தமிழ் சினிமாவில் மிகவும் பாப்புலரான நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர். இவர் பல படங்களுக்கு நடனம் அமைத்து கொடுத்திருக்கிறார். பிரபு தேவாவின் டான்ஸ் குரூப்பில் இருந்து வந்தவர் தான் ராபர்ட் மாஸ்டர். ஆரம்பத்தில் பிரபுதேவா நடித்த படங்களில் பிரபுதேவாவுக்கு பின்னாடி ராபர்ட் மாஸ்டர் தான் நடனம் ஆடிக் கொண்டிருப்பார். அதன் பிறகு தானாகவே நடனம் அமைக்க தொடங்கினார்.
இவர் நடனம் அமைத்துக் கொடுத்த பல பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாகி இருக்கின்றன. அதன் பிறகு இவரை கோலிவுட்டில் பார்க்க முடியவே இல்லை. திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார். அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் அமோக வரவேற்பையும் பெற்றார் ராபர்ட் மாஸ்டர். அதில் இன்னொரு சக போட்டியாளரான சின்னத்திரை நடிகை ரட்சிதாவுடன் ராபர்ட் மாஸ்டரின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
ரட்சிதாவை ராபர்ட் மாஸ்டர் காதலிக்கிறாரோ என்றெல்லாம் பல கிசு கிசுக்கள் வெளியாகின. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ரட்சிதாவையும் ராபர்ட் மாஸ்டரையும் ஒன்றாக பார்க்க முடியவில்லை. இருவருமே அவரவர் வேலைகளில் பிஸியாகி விட்டனர். இப்படி இருக்கும் சூழ்நிலையில் தான் ராபர்ட் மாஸ்டர் வனிதா உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க தொடங்கினார்.
மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் என பெயரிடப்பட்ட அந்த படத்தை வனிதாவே இயக்கி அதில் லீடு ரோலிலும் நடித்தார். ஏற்கனவே இருவருக்கும் ஒரு மறக்க முடியாத ஃபிளாஷ்பேக் இருந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளியானது. ஆனால் சில பல கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.
அந்த சம்பவத்திற்கு பிறகு இந்த படத்தின் மூலமாகத்தான் வனிதாவும் ராபர்ட் மாஸ்டரும் மீண்டும் இணைந்தனர். ஆனால் படத்தின் ப்ரோமோஷனில் ருந்து எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் ராபர்ட் மாஸ்டர் வரவே இல்லை. படத்தில் நடித்ததோடு சரி. இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டரின் தாய் சமீபத்தில் காலமானார். அவருடைய இறுதி ஊர்வலத்தில் ராபர்ட் மாஸ்டரே அழுதபடி நடனம் ஆடிக்கொண்டே வந்திருக்கிறார். அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/DMza622xDBB/?igsh=Mm53ZnJmaXQxeHgw