1. Home
  2. Cinema News

ரோபோ சங்கருக்கு பேர் வாங்கி கொடுத்த திரைப்படங்கள்!.. அஜித்துடன் அசத்திய விஸ்வாசம்!..

ரோபோ சங்கருக்கு பேர் வாங்கி கொடுத்த திரைப்படங்கள்!.. அஜித்துடன் அசத்திய விஸ்வாசம்!..

Robo shankar: உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரோபோ சங்கர் நேற்று இரவு 9 மணி அளவில் மரணம் அடைந்தார். அவரின் மரணச் செய்தி திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஏனெனில் கலந்த பல வருடங்களாகவே தனது நகைச்சுவை திறனால் பலரையும் சிரிக்க வைத்தவர் இவர்.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி:

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பல நடிகர்களை போல பேசியும், நடனமாடியும் மிமிக்ரி செய்து ரசிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக விஜயகாந்த் போல இவர் பேசினால் அவர் பேசுவது போலவே இருக்கும். அந்த அளவுக்கு திறமை கொண்டவர்.

விஜயகாந்தின் படத்தில் ஒரு துணை நடிகராக அறிமுகமான ரோபோ சங்கர் அதன் பின் சில படங்களில் நடித்தாலும் ஒரு கட்டத்தில் அவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தது. விஜய் சேதுபதியுடன் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, தனுசுடன் மாரி, சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன், அஜித்துடன் விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. குறிப்பாக விஷ்ணு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் இடம்பெற்ற ‘அன்னைக்கு காலையில ஆறு மணி’ என்கிற காமெடி ரசிகர்களிடம் பெரிய அளவில் ரீச் ஆனது.

ரோபோ சங்கருக்கு பேர் வாங்கி கொடுத்த திரைப்படங்கள்!.. அஜித்துடன் அசத்திய விஸ்வாசம்!..
#image_title

அஜித்துடன் விஸ்வாசம்:

robo shankar நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதில் வாயை மூடி பேசவும், மாரி, மாயா, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், வேலைக்காரன், மன்னர் வகையறா, கலகலப்பு 2, இரும்புத்திரை, மாரி 2, விஸ்வாசம், மிஸ்டர் லோக்கல், கோப்ரா, சிங்கப்பூர் சலூன் போன்ற படங்கள் இவருக்கு முக்கிய படங்களாக அமைந்தது. கமலின் தீவிர ரசிகர் இவர்.

ரோபோ சங்கரின் மறைவிற்கு திரையுலகினர் பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். நடிகர்களில் தனுஷ் சிவகார்த்திகேயன் ஆகியோர் நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.