1. Home
  2. Cinema News

பணம் வேணாம்!. அப்பாதான் வேணும்!. விஜய பிரபகாரனிடம் கதறி அழுத ரோபோ சங்கர் மகள்!..

பணம் வேணாம்!. அப்பாதான் வேணும்!. விஜய பிரபகாரனிடம் கதறி அழுத ரோபோ சங்கர் மகள்!..

Robo Shankar: மதுரையை சேர்ந்த ரோபோ சங்கர் தொடக்கத்தில் நிறைய கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். உடம்பு முழுவதும் சில்வர் பெயிண்ட் அடித்து ரோபோ போல நடனமாடியதால் ரோபோ சங்கர் என இவரை எல்லோரும் கூப்பிட்டார்கள். அதன்பின் விஜய் டிவியில் கலக்கப்போவது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார்.

கலக்கப்போவது யாரு:

கலக்கப்போவது யாரு பல எபிசோட்களில் ரோபோ சங்கர் கலந்து கொண்டு ரசிகர்களை ரசிக்க வைத்தார். அப்படியே திரைப்படங்களிலும் நடிக்க துவங்கி காமெடி நடிகராக வலம் வந்தார். மாரி, வேலைக்காரன், விஸ்வாசம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட சில படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

பணம் வேணாம்!. அப்பாதான் வேணும்!. விஜய பிரபகாரனிடம் கதறி அழுத ரோபோ சங்கர் மகள்!..
robo shankar

சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின் குணமடைந்தார். அளவுக்கு அதிகமான மது பழக்கம் இருந்ததால் மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதாக அப்போது சொல்லப்பட்டது. அதன் பின் குடிப்பழக்கத்தை விட்டு விட்டதாகவும், குடும்பத்தினர் தன்னை நன்றாக கவனித்துக் கொள்வதற்காகவும் பல ஊடகங்களிலும் பேட்டி கொடுத்தார்.

மருத்துவமனையில் அனுமதி:

மேலும் உடல்நிலை காரணமாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த ரோபோ சங்கர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். அதோடு உணவு பழக்கத்துடன், ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து வந்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில்தான் படப்பிடிப்பில் மயங்கி விழுந்து நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு கமல்,தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற திரைப்பிரபலங்களும், விஜய் டிவி பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

விஜய பிரபாகரன் நேரில் அஞ்சலி:

இந்நிலையில் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மகன்கள் விஜய பிரபாகரனும், சண்முக பாண்டியனும் இன்று காலை ரோபோ சங்கருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நேரில் சென்றார்கள். அப்போது விஜய பிரபகாரன் ஒரு கவரில் இருத பணத்தை ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவிடம் கொடுக்க அவரோ ‘எங்களுக்கு பணம் வேண்டாம்.. அப்பாதான் வேண்டும்’ என கதறி அழுதார். எனவே, சங்கரின் மனைவியிடம் அவர் பணத்தை கொடுக்க அந்த பணத்தை பெட்டியின் மீது வைத்து ‘சங்கரா. இங்க பாரு.. மாமாகிட்ட இருந்து வந்திருக்கு’ என அவரின் மனைவி சொல்லி விஜய பிரபாகரன் கண் கலங்கினார்.

பணம் வேணாம்!. அப்பாதான் வேணும்!. விஜய பிரபகாரனிடம் கதறி அழுத ரோபோ சங்கர் மகள்!..
vijaya prabakaran

அதை பார்ப்பவர்களை கலங்க வைத்தது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபகாரன் ‘இதுவரை எல்லோரையும் சிரிக்க வைத்த ரோபோ சங்கர் தற்போது எல்லோரையும் அழ வைத்துவிட்டு சென்றிருக்கிறார். கேப்டன் போல அழகாக பேசி நடிப்பார். நாங்கள் அதை பலமுறை ரசித்திருக்கிறோம். அவரின் மறைவு பெரிய அதிர்ச்சி’ என பேசி விட்டு சென்றார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.