1. Home
  2. Cinema News

Robo Shankar: ரோபோ சங்கரின் கடைசி ஆசை… மதுரை முத்து சொன்ன அந்தத் தகவல்!

Robo Shankar: ரோபோ சங்கரின் கடைசி ஆசை… மதுரை முத்து சொன்ன அந்தத் தகவல்!

இயல்பான கலை வெளிப்பாட்டால் திரை உலகில் ரசிகர்களை மகிழ்வித்தவர் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர். இவர் மறைவு திரை உலகையே பேரதிர்ச்சிக்குள் ஆக்கியுள்ளது. இவருடன் பயணித்த சக கலைஞர் மதுரை முத்து. இவரைப் பற்றி என்ன சொல்கிறார்னு பாருங்க.

20 ஆண்டுகள் அவருடன் பயணித்துள்ளேன். முதல் முதலா காம்போ என்னுடன் சேர்ந்து செய்தார். வாயிலேயே 4 இன்ஸ்ட்ரூமென்ட்டுக்கு உள்ள மியூசிக் கொடுப்பார். அவருடன் பயணித்த நாள்கள் மறக்க முடியாதது. அவர் பார்க்கத்தான் ஜைஜாண்டிக். ஆனால் குழந்தைத்தனமாக பேசுபவர்.

பாடி லாங்குவேஜ்ல ரொம்ப அசாத்தியமான திறமையைக் காட்டி நடிப்பவர். அவர் வந்தாலே அந்த இடம் காமெடியால் களைகட்டும். கமல் வெறியன் அவர். கமல் படங்கள் வந்தால் குடும்பத்துடன் ஓபனிங் ஷோ போய் விடுவார். கையில் சூடம் ஏற்றுவார். கமலுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Robo Shankar: ரோபோ சங்கரின் கடைசி ஆசை… மதுரை முத்து சொன்ன அந்தத் தகவல்!
#image_title

மஞ்சள் காமாலையில் இருந்து சிகிச்சை பெற்று மீண்டு வந்த ரோபோ சங்கர் உடல் மெலிந்து காணப்பட்டார். அதன்பிறகு பழைய உடற்கட்டைக் கொண்டு வந்தார். அந்த நிலையில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்ட போது திடீரென மயங்கி விழ அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருடைய கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயல் இழந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ரோபோ சங்கருக்கு மதுப்பழக்கம் உண்டு.

மஞ்சள் காமாலை என்றாலே மதுவை அறவே தவிர்க்க வேண்டும். அந்த வகையில் மஞ்சள் காமாலை முதலில் கல்லீரலைத் தான் தாக்கும். அதுபோல மதுப்பழக்கமும் சேரும்போது கல்லீரல் செயல் இழந்து விடும். மீண்டும் அவர் குடித்து இருப்பதால்தான் இந்த நிலைக்கு ஆளானாரோ என பலரும் தகவல் தெரிவித்து வருகின்றனர்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.