1. Home
  2. Cinema News

Robo Shankar: கோடியில் கடன் வாங்கியும் காப்பாத்த முடியலயே.. உறவினர்கள் கதறல்..

Robo Shankar: கோடியில் கடன் வாங்கியும் காப்பாத்த முடியலயே.. உறவினர்கள் கதறல்..

அசத்தல் காமெடியன் robo :

தன்னுடைய கடின உழைப்பால் stand up comedy செய்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் ரோபோ சங்கர். விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி பின்னர் பல திரைப்படங்கள் reality shows என்று மக்களை இன்று வரை entertain செய்து வந்தார்.

ரோபோ சங்கரின் தீராத குடிப்பழக்கத்தால் அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டு மீண்டும் மறுபிறப்பு பிறந்து வந்தார். எல்லாம் சரியாக போய்க் கொண்டிருந்த நேரத்தில் மீண்டும் விட முடியாத குடியால் கல்லீரல் பாதிப்புக்கு உள்ளாகி நேற்று இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார்.

இந்நிலையில் அவரின் உறவினர் ரோபோ சங்கர் குடும்பத்தின் கவலைக்கிடமான நிலையை கூறியுள்ளார்கள். அதில், “நான் டான்ஸ் குரூப் வைத்திருக்கிறேன். அதில் அவரின் மனைவி கடந்த கலைஞர். அவர்தான் என்னிடம் ஷங்கரை அழைத்து வந்து ஒரு வாய்ப்பு கொடுங்க அண்ணா என்று கேட்டார். நானும் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தேன்”.

ரோபோ கெட்டப்பால் side effects :

” அப்பொழுது உடல் முழுவதும் paint அடித்துக்கொண்டு robo போல நடனம் ஆடினார். அதற்கு மிகப்பெரிய வரவேற்பு மக்கள் மத்தியில் இருந்து வந்தது. அன்று அவர் நடனமாடி முடித்தவுடன் அவருக்கு சம்பளமாக நான் 100 ரூபாய் கொடுத்தேன். அதன் பிறகு ரோபோ சங்கருக்கு பல வாய்ப்புகளை வாங்கி கொடுத்திருக்கிறேன்”.

”அதன் பிறகு இன்று வரை திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். குறிப்பாக விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் அவர் வேலை செய்யும் பொழுது ரோபோ சங்கரின் காமெடி கேட்டுவிட்டுதான் அஜித் சாப்பிட செல்வார். அந்த மாதிரி jolly-யா வாழ்ந்தார். அப்படி திரைத்துறையில் முன்னணி கலைஞனாக வந்து கொண்டிருக்கும் சமயத்தில் இப்படி ஆகிவிட்டது”.

”அவர் சின்னத்திரை காமெடி கலைஞர்களுக்கு எல்லாம் captain தன்னுடைய சொந்த முயற்சியால் முன்னுக்கு வந்து இன்று இவரை போல் முன் வரத் துடிக்கும் பல இளைஞர்களுக்கு முன் உதரமாக இருந்துள்ளார். இப்ப கூட எனக்கு போன் பண்ணி அண்ணா ஐந்து படங்களில் book பண்ணியிருக்காங்க advance தொகையும் கொடுத்திருக்காங்க”.

கடனில் சிக்கிய குடும்பம் :

”என்று சொல்லி சந்தோஷப்பட்டார். ஆனால் இன்று இப்படி நடக்கும் என்று நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. தனிப்பட்ட முறையில் அவருக்கென்று எந்த மன வருத்தமும் மன உளைச்சலும் கிடையாது. மேடை நிகழ்ச்சிகளுக்கும், reality show-களுக்கும் மிகப்பெரிய இழப்பு. இளம் வயதில் ரோபோ சங்கர் robo get up போடும்பொழுது அதற்காக மன்னனை ஊற்றி உடல் முழுவதும் பரவி அந்த paint-ஐ கழுவுவார்”.

”அதனால் அவருக்கு சில side effects வந்தது. மற்றும் நிறுத்த முடியாத குடிப்பழக்கமும் மஞ்சள் காமாலையும் அவரது இறப்புக்கு முக்கிய காரணமாக இருந்தது. ரோபோ சங்கரின் மருத்துவ செலவிற்கு அவரின் குடும்பத்தார் கோடிக்கணக்கில் செலவு செய்தார்கள். அவரின் மனைவி பிரியங்காவிற்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை”.

வடிவேலு பாலாஜிக்காக வாங்கிய கடன் :

“கடன் வாங்கி தான் அவருக்கு treatment செய்தார்கள். இந்த கடனை எல்லாம் அவர்கள் எப்படி அடைக்க போகிறார்கள் என்பது தெரியவில்லை. அது மட்டும் இல்லை வடிவேலு பாலாஜிக்காக அவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்பதற்காக நிறைய கடன் வாங்கி விட்டார்கள்.

”அதையெல்லாம் எப்படி திரும்ப செலுத்த போகிறார்கள் என்பது தெரியவில்லை. ஒரு பக்கம் ரோபோ சங்கர் மறைவு மறுபக்கம் இந்த கடன் பிரச்சனை இதையெல்லாம் அவரின் குடும்பத்தார் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பது தெரியவில்லை”. என்று கண்ணீர் மல்க தங்களின் வருத்தங்களை தெரிவித்துள்ளனர்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.