1. Home
  2. Cinema News

RoboShankar: ரோபோ சங்கர் உடல் பாதித்தற்கு காரணம்… விளக்கம் தந்த நடிகர் இளவரசு

RoboShankar: ரோபோ சங்கர் உடல் பாதித்தற்கு காரணம்… விளக்கம் தந்த நடிகர் இளவரசு

RoboShankar: நடிகர் ரோபோ சங்கர் உடல் நல பிரச்னையால் உயிரிழந்து இருக்கும் நிலையில் நடிகர் இளவரசு அவருடைய உடல் பிரச்னைக்கு காரணமே இதுதான் எனச் சொல்லி இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் புகழ் பெற்றவர் ரோபோ சங்கர். தொடர்ச்சியாக பல டிவி நிகழ்ச்சிகளில் பிரபலமாக இருந்த ரோபோ சங்கருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களின் படங்களில் நடித்தார். 

இந்த நேரத்தில் அவருக்கு திடீரென உடல்நல பிரச்னை ஏற்பட்டது. உடல் இளைத்து பார்ப்பதற்கே பரிதாபமான நிலையில் இருந்தார். பின்னர் உடல் தேறி வந்த நிலையில் என்னுடைய தலையே தொங்கிவிட்டது. நால்வர் என்னை உக்கார வைக்கும் நிலையில் இருந்தேன். 

பின்னர் மூலிகை மருத்துவத்தால் மட்டுமே என்னுடைய உடல் தேறி வந்தது எனக் குறிப்பிட்டார். மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். கடைசியாக சன் டிவியின் டாப் நிகழ்ச்சியான டாப் குக்கு டூப் குக்கு ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டார். 

முதல் எலிமினேஷனாக கடந்த வாரம் அவர் வெளியேறி இருந்தார். அப்போது அவருடைய நகைச்சுவையான பேச்சு வைரலாக பரவியது. திரும்பி வருவேன் எனப் பேசி விட்டு அவர் சென்ற வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் வர முடியாத இடத்துக்கு போய்ட்டீங்களே எனக் கண்ணீர் விடுகின்றனர். 

RoboShankar: ரோபோ சங்கர் உடல் பாதித்தற்கு காரணம்… விளக்கம் தந்த நடிகர் இளவரசு
roboshankar

ரோபோ சங்கர் இறப்புக்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடிகர் இளவரசு சொல்லி இருக்கும் காரணம் வைரலாகி வருகிறது. ரோபோ சங்கர் ஆரம்ப காலத்தில் மேடை நிகழ்ச்சிக்காக உடம்பில் சில்வர் பெயிண்ட் அடிப்பதை வழக்கமாக வைத்து இருந்தார். 

அதை கிளீன் செய்ய பின்னர் மண்ணெண்ணெய் வைத்து துடைத்து எடுப்பார்களாம். தொடர்ந்து அதை செய்து வந்த நிலையில் அதுவே அவரின் தோலுடைய வலுவை இழக்க செய்துள்ளது. இதுவே அவருக்கு மஞ்சள் காமாலை வர காரணம் என்றும், 46 வயதிலே அவர் உயிரை இழந்ததற்கும் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். 

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.