1. Home
  2. Cinema News

Robosankar: நாளை மறுநாள் பேரனுக்கு காதுக்குத்து.. வேதனையுடன் பேசிய சினேகன்

Robosankar: நாளை மறுநாள் பேரனுக்கு காதுக்குத்து.. வேதனையுடன் பேசிய சினேகன்

BodyBuilder:

சின்னத்திரையில் வருவதற்கு முன்னரே ரோபோ சங்கர் பாடிபில்டராகத்தான் இருந்தார். ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு தனது கட்டுமஸ்தான உடம்பை காட்டி ரசிகர்களை ரசிக்க வைத்தார். குறிப்பாக உடல் முழுவதும் அலுமினியம் பெயிண்டை பூசிக் கொண்டு தனது திறமையை காட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார். அதன் மூலம் ஊர்முழுக்க மிகவும் ஃபேமஸ் ஆனார் ரோபோ சங்கர்.

ஆங்காங்கே நடக்கும் திருவிழாக்களில் கச்சேரிகளில் கலந்து கொண்டு தனது கட்டுமஸ்தான உடம்பை காட்டி பிரபலமானார். அதன் மூலம்தான் விஜய் தொலைக்காட்சியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி:

அதன் மூலம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன் முகத்தை காட்ட ஆரம்பித்தார். அந்த நிகழ்ச்சியால் மேலும் பிரபலமானார். மேலும் அது எது இது நிகழ்ச்சியிலும் சிரிச்சா போச்சு பிரிவிலும் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இப்படி தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களிடம் எளிதாக தனக்கான வரவேற்பை பெற்றார்.

சோகத்தில் ஆழ்த்திய மரணம்:

இந்த நிலையில் நேற்று அவருடைய மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏற்கனவே மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் போராடி உயிரோடு வந்தார் ரோபோ சங்கர். அதற்கு முக்கிய காரணமாக இருந்தது குடிப்பழக்கம் தான். அதனால் 120 கிலோ எடையிருந்த ரோபோ சங்கர் 45 கிலோவுக்கு குறைந்தார். அதன் பிறகு குடிப்பழக்கத்தை அறவே நிறுத்திவிட்டதாக சொல்லியிருந்தார்.

ஆனால் நேற்று முன் தினம் திடீரென அவருக்கு உடல் நிலையில் பிரச்சினை ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டிருந்த ரோபோ சங்கர் நேற்று இரவு காலமானார். சிறு நீரக பிரச்சினை, உணவு குழாய் பிரச்சினை, மஞ்சள் காமாலை தொடர்பான உடல் நலக் குறைபாடுகள், குடல் ரத்தப்போக்கு என பல குறைபாடுகளால் பாதிக்கப்பட சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

திரையுலகினர் அஞ்சலி:

அவருடைய மறைவிற்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் போய் சந்தித்து அவருடைய குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். அதில் சிவகார்த்திகேயனும் ரோபோ சங்கரின் உடலை பார்த்ததும் கண் கலங்கி விட்டார்.

பேரனுக்கு காதுகுத்து:

தனது மகள் திருமணத்தை கோலாகலமாக நடத்தினார் ரோபோ சங்கர். மகள் திருமணம், பேரக் குழந்தை என மிகவும் சந்தோஷமாக இருந்த ரோபோ சங்கர் இப்போது நம்மிடையே இல்லை. மேலும் நாளை மறு நாள் பேரனுக்கு காதுகுத்து வைத்திருந்தாராம்.ஆனால் அதற்குள் நம்மை விட்டு சென்று விட்டார் என சினேகன் வேதனையுடன் கூறினார். மேலும் என்னை போல சில நண்பர்கள் அவரிடம் அடிக்கடி கூறுவது உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் என்றுதான்.

Robosankar: நாளை மறுநாள் பேரனுக்கு காதுக்குத்து.. வேதனையுடன் பேசிய சினேகன்
roboshankar

ஆனால் அவருடைய மனது என்ன சொல்கிறதோ அதைப்படி தான் நடப்பார். அதன் விளைவு இன்று நம்மிடையே அவர் இல்லை என்பதுதான் என்றும் சினேகன் வருத்தத்துடன் கூறினார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.