1. Home
  2. Cinema News

புலி வாலை பிடிச்ச கதைதான்!.. குழப்பத்தில் அஜித் - ஆதிக் படம்!.. அட போங்கப்பா!…

புலி வாலை பிடிச்ச கதைதான்!.. குழப்பத்தில் அஜித் - ஆதிக் படம்!.. அட போங்கப்பா!…

AK64: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி.
இந்த படத்திற்கு முன் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படம் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை. ஆனால் குட் பேட் அக்லியை இயக்கி ஆதிக் அஜித்தின் தீவிர ரசிகர் என்பதால் பல படங்களில் அஜித்திடம் அவர் எதையெல்லாம் ரசித்தாரோ அதையெல்லாம் குட் பேட் அக்லி படத்தில் கொண்டு வந்தார்.
எனவே படம் அஜித் ரசிகர்களுக்கு சூப்பர் விருந்தாகவே அமைந்தது. இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்குகிறார் என்பது உறுதியானதும் மைத்ரி நிறுவனத்திடம் பேசினார்கள். ஆனால் அஜித்துக்கு 180 கோடி சம்பளம் மற்றும் மற்ற செலவுகளை எல்லாம் சேர்த்தால் பட்ஜெட் 300 கோடியை தொட்டது. எனவே மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பின்வாங்கி விட்டது. அதன்பின் சன் பிக்சர்ஸ், லைக்கா, ஏஜிஎஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் கதவுளையும் தட்டினார்கள். ஆனால் படத்தின் பட்ஜெட்டை கேட்டு எல்லோரும் ஒதுங்கிக் கொண்டனர்.

புலி வாலை பிடிச்ச கதைதான்!.. குழப்பத்தில் அஜித் - ஆதிக் படம்!.. அட போங்கப்பா!…
#image_title

அதன்பின் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இப்படத்தை தயாரிக்க முன்வந்தார். இவர் அடிப்படையில் இவர் ஒரு விநியோகஸ்தர். சின்ன சின்ன படங்களை வாங்கி விநியோகம் செய்பவர். குறைவான பட்ஜெட்டுகளில் சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். அஜித் படத்தை நாம் தயாரித்தால் நாமும் பெரிய தயாரிப்பாளர் ஆகிவிடலாம் என நினைத்து களத்தில் இறங்கினார்.

இந்த படத்தை எடுக்க வேண்டுமெனில் குறைந்தபட்சம் 300 முதல் 350 கோடி வரை அவர் கையில் இருக்க வேண்டும். அதற்கான பணத்தை புரட்ட வேண்டும்.. வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும்.. அதற்கு வட்டி கட்ட வேண்டும்.. இதையெல்லாம் பார்த்த ராகுல் ‘நம்மால் இந்த படத்தை தயாரிக்க முடியுமா?’ என்கிற சந்தேகத்திற்கு வந்து விட்டாராம்.

ஆனாலும் அவர் ஆதிக்குடன் தொடர்ந்து பயணித்து வருகிறார். எனவே அங்கு என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை அதே நேரம் வெளிநாட்டில் இருந்து யாராவது ஒரு தயாரிப்பாளர் கிடைத்தால் அவரின் தலையில் இந்த படத்தை கட்டிவிடலாம் எனவும் அவர் திட்டமிட்டு இருக்கிறாராம் என்ன நடக்கப் போகிறது என்பது தெரியவில்லை இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்க விருந்த நிலையில் இப்படி ஒரு குழப்பம் வந்திருக்கிறது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.