Jananayagan: ஜனநாயகனில் AK64 பட தயாரிப்பாளர்!.. அஜித்துக்கு இதெல்லாம் பிடிக்காதே!...

கோட் திரைப்படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம்தான் ஜனநாயகன். இது என்னுடைய கடைசிப் படம் என விஜய் அறிவித்தார். விஜயை இனிமேல் திரையில் பார்க்க முடியாதது அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் விஜய் அரசியலுக்கு போகிறார் என்பது அவர்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. ஏனெனில் விஜய் முதலமைச்சராகி நாட்டை ஆள வேண்டும் என்பது அவர்களின் ஆசையாக இருக்கிறது.
விஜய் தனது அரசியல் பணிகளை கொஞ்சம் தீவிரமாக துவங்கிய போதுதான் கரூர் சம்பவம் ஒரு ஸ்பீடு பிரேக் போல அமைந்துவிட்டது. ஆனாலும் தற்போது அதிலிருந்து விஜயும், தமிழக வெற்றி கழக நிர்வாகிகளும் மீண்டு வருகிறார்கள். விரைவில் விஜய் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டிருக்கிறார்.
ஒருபக்கம் ஜனநாயகன் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு 2026 ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். மேலும் மமீதா பைஜூ, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பொதுவாக ஒரு நடிகர் அரசியலுக்கு போனால் அவர் நடிக்கும் படங்களுக்கு அரசியல்ரீதியாக பிரச்சனைகளை கொடுப்பார்கள். எனவே ஜனநாயகன் படம் சிக்கல் இல்லாமல் வெளியாகுமா என்கிற கேள்வி பலரின் மனதிலும் இருக்கிறது.
ஜனநாயகன் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை வாங்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், ஏஜிஎஸ், லலித் குமார், உள்ளிட்ட பலரும் போட்டி போட்டனர். இதில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் அஜித் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் தயாரிப்பாளர். அதோடு இவர் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு நெருக்கமானவர் என்பதால் இவருக்கு இந்த படத்தை கொடுக்க வேண்டாம் என விஜயே சொல்லிவிட்டதாக ஏற்கனவே செய்திகள் கசிந்தது.
ஆனால் என்ன நடந்தது என தெரியவில்லை. தற்போது ஜனநாயகன் படத்தின் தமிழ்நாடு மற்றும் கேரள ரிலீஸ் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்தான் வாங்கி இருக்கிறார் என்கிறார்கள். வினோத்தின் முந்தைய படங்களை தமிழகத்தில் வெளியிட்டது ராகுல்தான். எனவே, வினோத்தின் பரிந்துரையில் இது நடந்திருக்கலாம் என்கிறார்கள். மேலும், ‘உதயநிதிக்கு நெருக்கமான ராகுல் படத்தை வெளியிடுவதால் அரசியல்ரீதியாக எந்த பிரச்சினையும் கொடுக்க மாட்டார்கள். இது நல்லதுதான்’ என்றும் சிலர் பேசுகிறார்கள்.
ஒருபக்கம் தன்னுடைய தயாரிப்பாளர் வேறு படத்தில் கவனம் செலுத்துவதை அஜித் விரும்பமாட்டார். அஜித் இதை ஒரு பாலிசியாகவே வைத்திருக்கிறார். அஜித் 64 படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது. அப்படி இருக்கும்போது ஜனநாயகன் படத்தை ராகுல் வெளியிடுவதை அஜித் விரும்ப மாட்டார் என்றும் பேசுகிறார்கள். இதை எப்படி ராகுல் சமாளிப்பார் என்பது தெரியவில்லை.