சியான் விக்ரமுக்கு ரூட் கிளியர்!.. அதிக தியேட்டர்களில் வெளியாகும் வீர தீர சூரன்!...

by Murugan |
veera dheera sooran
X

Veera dheera sooran: நடிகர் சியான் விக்ரம் நடித்து உருவாகியுள்ள திரைப்படம்தான் வீர தீர சூரன். இரண்டு பாகங்களாக இப்படம் உருவாகவுள்ளது. புது முயற்சியாக இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிடுகிறார்கள். இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும், சிந்துபாத், சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கிய அருண் இயக்கியுள்ளார்.

வீர தீர சூரன் படத்தில் துஷரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் உருவாகி சில மாதங்கள் ஆகியும் இன்னமும் வெளியாகவில்லை. இப்போதெல்லாம் புதிய படங்களின் ரிலீஸ் தேதியை ஓடிடி நிறுவனங்கள்தான் முடிவு செய்கின்றன. படம் வெளியாகி 4 வாரங்களில் ஓடிடியில் படம் வெளியாக வேண்டும்.

ஆனால், ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் படங்களில் ரிலீஸ் தேதியை வைத்து மற்ற படங்கள் ஓடிடியில் வெளியாகும். இதனால், சில மாதங்கள் புதிய படங்களை ஓடிடி நிறுவனங்கள் வாங்காமல் இருப்பார்கள். வீர தீர சூரன் ஓடிடியில் விற்கப்படாமல் இருந்ததே படம் ரிலீஸ் ஆகாமல் இருப்பதற்கு காரணம் என சொல்லப்பட்டது.


தற்போது அது எல்லாம் சரியாகி மார்ச் 27ம் தேதி ரிலீஸ் என முடிவு செய்யப்பட்டது. அதேநேரம், இரண்டு புதிய படங்கள் வீர தீர சூரனுக்கு எமனாக வந்தன. லூசிபர் படத்தின் 2ம் பாகம் போல் உருவாகியுள்ள எம்புரான் படம் மார்ச் 27ம் தேதி ரிலீஸ் என்றார்கள். இந்த படம் வந்தால் கேரளாவில் அதிக தியேட்டர்கள் கிடைக்காது.

அதேபோல், பவன் கல்யாணின் ஹரிஹர வீரமல்லு படமும் அதே தேதியில் ரிலீஸ் என்றார்கள். அந்த படம் வந்தால் ஆந்திராவிலும், வெளிநாட்டிலும் தியேட்டர்கள் கிடைக்காது. எனவே, வீர தீரன் சூரன் மார்ச் 24ம் தேதி ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்கிற குழப்பம் நீடித்து வந்தது.

ஆனால், அதிர்ஷ்டவசமாக எம்புரான் மற்றும் ஹரிஹர வீரமல்லு ஆகிய 2 படங்களும் மார்ச் 27ம் தேதி வெளியாகவில்லை. மேலும், அந்த தேதியில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடும் படம் எதுவும் தமிநாட்டில் வெளியாகவில்லை. எனவே, வீர தீர சூரனுக்கு எல்லா ரூட்டும் கிளியர் ஆகிவிட்டது. எனவே, வருகிற 27ம் தேதி வீர தீரன் சூரன் உலகம் முழுவதும் அதிக தியேட்டர்களில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Next Story