தனுஷ படுத்த படுக்கை ஆக்கிட்டாங்களேப்பா!.. அவருக்கு என்னதான் ஆச்சு?.. உண்மை இதுதான்!..

by Ramya |
dhanush
X

dhanush

நடிகர் தனுஷ்: சினிமாவில் தற்போது நிற்க நேரமில்லாமல் பிஸியாக ஓடிக் கொண்டிருக்கின்றார் நடிகர் தனுஷ். தன்னைச் சுற்றி எவ்வளவு சர்ச்சை வந்தாலும் அதை எல்லாம் சற்று கூட காதில் வாங்கிக் கொள்ளாமல் அடுத்தடுத்த திரைப்படங்களை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றார் நடிகர் தனுஷ். தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு, பாலிவுட் என்று பிசியாக இருந்து வருகின்றார்.

நடிக்கும் படங்கள்:

இவர் கடைசியாக தன்னுடைய 50-வது படமான ராயன் என்கின்ற திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து தனது இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகின்றார் நடிகர் தனுஷ். அந்த வகையில் தற்போது நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கி முடித்து இருக்கின்றார்.


இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டிருக்கின்றது. இதனை தொடர்ந்து இட்லி கடை என்கின்ற திரைப்படத்தை தானே இயங்கி நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்கி வரும் தனுஷ் மற்றும் இயக்குனர்களின் படங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றார். அந்த வகையில் தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்துவிட்டது. அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் 55 திரைப்படத்தில் நடிப்பதற்கும் கமிட்டாகி இருக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

தனுஷ் உடல்நிலை:

நடிகர் தனுஷுக்கு உடல்நிலை சரியில்லை என்று கடந்த சில தினங்களாக சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து தகவல் வெளியாகி கொண்டிருந்தது. அதிலும் அவருக்கு இட்லி கடை திரைப்படத்தின் போது அவருக்கு ஏதோ விபத்து ஏற்பட்டதாகவும், அதனால் அவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறி வந்தார்கள். ஒரு கட்டத்தில் நடிகர் தனுஷ் படுத்த படுக்கையாகி விட்டார் என்கின்ற அளவிற்கு பேசத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் அதெல்லாம் வதந்தி என்று கூறப்படுகின்றது.

உண்மை இதுதான்:

இட்லி கடை திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அதில் ஒரு காட்சியில் நடிகர் தனுஷ் புகை நிறைந்த இடத்தில் யாரையோ தேடுவது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தது. அதில் டூப் எதுவும் போடாமல் இவரே நடித்திருக்கின்றார். இவருக்கு தூசிகள் சேராது என்பதால் உடனே அவருக்கு அலர்ஜி போல் ஆகிவிட்டது.


இதனால் அங்கிருந்து அவர் சென்னை கிளம்பி வந்துவிட்டார். இங்கு வந்து அவர் நலமுடன் தான் இருக்கின்றார். தற்போது நியூ இயர் கொண்டாட்டத்திற்காக வெளிநாட்டில் இருந்து வருகின்றார். அதற்குள் சமூக வலைதள பக்கங்களில் நடிகர் தனுஷின் உடல்நிலை மிக மோசமாக இருக்கின்றது என்கின்ற அளவுக்கு தகவல்களை பரப்பி வருகிறார்கள் என்று சினிமா விமர்சனங்கள் கூறியிருக்கிறார்கள்.

Next Story