பிரபல நடிகருக்கு கத்திகுத்து… ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி…
Actor: பிரபல பாலிவுட் நடிகருக்கு நடந்திருக்கும் கத்திகுத்து சம்பவம் குறித்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
பொதுவாக சாதாரண மக்களுக்கு தான் பெரிய அளவில் ஆபத்து இருக்கும். பிரபலங்கள் எப்போதுமே பாதுகாப்பாக தான் இருப்பார்கள். ஆனால் இப்போது விஷயமே தலைகீழாகி இருக்கிறது. பிரபல நடிகரான பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் தன்னுடைய மனைவி கரீனா கபூருடன் மும்பையில் வாழ்ந்து வருகிறார்.
நடு இரவு 2.30 மணிக்கு திருட சிலர் உள்ளே வந்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் மற்றவர்கள் முழிப்பதற்குள் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. உள்ளே வந்த திருடர்களை வீட்டில் வேலை செய்பவர் பிடிக்க பார்க்க அப்போ சைஃப் வந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதில் ஆறு வெட்டு காயங்கள் சைஃபிற்கு ஏற்பட்டுள்ளதாகவும், அதில் இரண்டு ஆபத்தானதாகவும் கூறப்படுகிறது. முதுகு தண்டில் மிகப்பெரிய அடி எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மும்பை மருத்துவமனையில் உடனடியாக சைஃப் அலிகான் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்.
உடனடியாக அவருக்கு அவசர சர்ஜரி ஒன்றும் நடந்துள்ளதாம். இதுகுறித்து போலீஸார் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குடும்பத்தில் மற்றவர்கள் நலமுடன் இருப்பதாகவும் மக்கள் அமைதியாக இருந்தால் தான் அடுத்தக்கட்ட விசாரணை நகரும் என போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
பிரபல பாலிவுட் நடிகரான சைஃப் அலிகானுக்கே இந்த நிலைமை என்றால் பொதுமக்கள் நிலைமை என்ற பயம் தொடங்கி இருக்கிறது. இந்த சம்பவம் தற்போது நாட்டில் அதிர்வலைகளை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.