கணவர் மேல அவ்வளவு லவ்வா!.. ஜிவி பிரகாஷுக்கு கொடுத்த விருது.. சைந்தவி செஞ்சத பாருங்க!..
ஜிவி பிரகாஷ்: தமிழ் சினிமாவில் வெயில் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் ஜிவி பிரகாஷ். அதனைத் தொடர்ந்து ஏகப்பட்ட திரைப்படங்களுக்கு பிரமாதமான இசையை கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக வளம் வந்தார். அதிலும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து திரைப்படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு ஜிவி பிரகாஷுக்கு கிடைத்தது.
நடிகர் பயணம்: தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன்னணி இசையமைப்பாளராக வளம் வந்த ஜிவி பிரகாஷ் திடீரென்று ஹீரோவாக மாறினார். ஆனால் இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் தோல்வியை மட்டுமே சந்தித்து இருக்கின்றது. இருப்பினும் தொடர்ந்து சினிமாவில் படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் மெண்டல் மனதில் என்கின்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார்.
வெற்றி பயணம்: இசையமைப்பாளராக இந்த ஆண்டு ஜிவி பிரகாஷ் குமாருக்கு மிகச்சிறந்த ஆண்டாக அமைந்தது. இவர் இசையில் இந்த ஆண்டு முதல் வெளிவந்த படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. கேப்டன் மில்லர், தங்கலான், அமரன், லக்கி பாஸ்கர் போன்ற படங்கள் இவரின் இசைக்காக தனி பாராட்டுகளை பெற்றது. அதிலும் இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு வெளியான அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் திரைப்படம் மிகச்சிறந்த பாராட்டுகளை பெற்றிருக்கின்றது.
சிறந்த இசையமைப்பாளர் விருது: சென்னையில் நேற்று 22 ஆவது சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் ஜிவி பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அமரன் திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது. இந்த விருதை நடிகர் சங்க தலைவர் நாசர் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து வழங்கி இருந்தார்கள். இதனை ஜிவி பிரகாஷ் மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டார்.
சைந்தவி ரியாக்சன்: ஜிவி பிரகாஷ் பாடகி சைந்தவியை காதலித்து கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை கடந்த ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. இருவரும் பிரிவதாக அறிவித்திருந்தார்கள். இது ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இருப்பினும் ஜிவி பிரகாஷ் சமீபத்தில் மலேசியாவில் நடத்திய கச்சேரியில் சைந்தவி கலந்து கொண்டு பாடலை பாடியிருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வந்தது. மேலும் இவர்கள் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற விருது விழாவில் சைந்தவியும் கலந்து கொண்டிருந்தார். அப்போது ஜிவி பிரகாஷ் விருது வாங்கும் போது சைந்தவி வேகமாக கைத்தட்டி உற்சாகப்படுத்தினார். மேலும் மேடையில் இருந்து ஜிவி பிரகாஷ் கீழே இறங்கும் வரை சைந்தவி கைதட்டி அவரை பார்த்துக்கொண்டிருந்த வீடியோவானது தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
Also Read : தியேட்டரே பத்திக்கிச்சு.. அதுல அடுத்த ஆட்டமா? புஷ்பா2 ஓடிடி ரிலீஸ் அப்டேட்…