ரஹ்மான் குடும்பத்திற்கு வேண்டுகோள் வைத்த மனைவி.. இந்த நிலைமையிலும் இப்படி ஒரு அறிக்கையா?

by Rohini |
rahman
X

இன்று காலை வெளியான செய்தியால் திரையுலகமே பரபரப்பில் இருந்தது. ஏஆர் ரஹ்மானுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுவரை அவரை பற்றி எந்தவொரு சர்ச்சையோ வதந்திகளோ வெளியானதே இல்லை. அதுமட்டுமில்லாமல் யாரிடமும் அதிகமாக சத்தமாக பேசவும் மாட்டார்.

திரையுலகில் ஒரு தலைசிறந்த மனிதராக பார்க்கப்பட்டார் ரஹ்மான். இந்த நிலையில் இப்படி ஒரு செய்தி அனைவரையும் வருத்தப்பட வைத்தது. அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்தவர்கள் தொடர்ந்து அவரை கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியானது. இதற்கிடையில் அவருடைய மகன் அமீன் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

தன் அப்பாவின் உடல் நிலை குறித்து யாரும் அவதூறு பரப்பவேண்டாம். அவர் நலமுடன் இருக்கிறார். அவருக்கு வேலையில் பிஸி காரணமாக நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு இப்போது அது சரி செய்யப்பட்டுவிட்டதாகவும் அந்த பதிவில் கூறியிருந்தார். இந்த நிலையில் ரஹ்மானின் மனைவி சாயிரா பானுவும் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதாவது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஞ்சியோகிராபி செய்யப்பட்டதாக செய்தி கிடைத்தது.

அவர் இப்போது நலமாக இருக்கிறார். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். நாங்கள் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை. நாங்கள் இருவரும் இன்னும் கணவன் மனைவிதான். தயவு செய்து என்னை முன்னாள் மனைவி என்று அழைக்காதீர்கள். குறிப்பாக அவரது குடும்பத்தாருக்கு ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். தயவு செய்து அவரை அதிக மன உளைச்சலுக்கு ஆளக்காதீர்கள் என்று அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார் சாயிரா பானு.

இப்படிப்பட்ட ஒரு மனைவி பக்கத்தில் இருந்தாலே அவருக்கு எந்தவித கஷ்டமும் வராது. ஒரு பக்கம் வேலை பளு இன்னொரு பக்கம் அவருக்கும் மனைவிக்கும் இடையே இருக்கும் விவாகரத்து பிரச்சினை என இதுவே ரஹ்மானை மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கும்.

Next Story