என் விவகாரத்துக்கு இதுதான் காரணம்!.. தேவையில்லாமல் அரசியல் ஆக்க வேண்டாம்!.. கடுப்பான சமந்தா!..
நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா விவாகரத்து செய்து பிரிவதற்கு முக்கிய காரணம் முன்னாள் அமைச்சர் கேடிஆர் தான் தற்போதைய தெலுங்கானா அமைச்சர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கொண்டா சுரேகா பேசியது தெலுங்கு சினிமா உலகத்தில் மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சமந்தாவுக்கு அரசியல்வாதி கேடிஆருக்கும் தொடர்பு இருப்பது போல கொண்டா சுரேகா பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக அமைச்சர் கொண்டார் சுரேகாவுக்கு நாக சைத்தன்யாவின் தந்தை நடிகர் நாகார்ஜுனா கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.
அமைச்சர் கொண்டா சுரேகா சொல்வதில் எந்த உண்மையும் இல்லை அது முற்றிலும் பொய்யான விஷயம் அவரது அரசியலுக்காக தன்னுடைய குடும்பத்தை பற்றிப் பேச எந்த தகுதியும் இல்லை என விளாசினார்.
நடிகர் நாக சைதன்யா தரப்புக்காக நாகார்ஜுனா எதிர்ப்பு தெரிவித்தார் என்றும் சமந்தா எதுவுமே வாய் திறக்கவில்லையே என ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், நடிகை சமந்தா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மதிப்புமிக்க அமைச்சர் சுரேகா தேவையில்லாமல் அரசியல் லாபத்துக்காக அரசியல் பக்கமே செல்லாத தன்னுடைய குடும்ப வாழ்க்கை பற்றி பேசுவது தவறான செயல் என கூறியுள்ளார்.
மேலும், தன்னுடைய விவாகரத்து இருவரும் மனம் ஒன்றி எடுத்த முடிவுதான் என்பதையும் இங்கே விளக்க விரும்புகிறேன் என்றும் சமந்தா அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய விவாகரத்து தொடர்பாக எந்த அரசியல் தலையிடும் இல்லை என்றும் மற்ற தேவையற்ற வதந்திகளை தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்து யாரும் பேசத் தேவையில்லை. எங்களுக்கான பிரைவசி இந்த விஷயத்தில் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் சமந்தா குறிப்பிட்டுள்ளார்.