‘stop it guys’ போன் பேசக் கூட சுதந்திரம் இல்லையா? சமந்தாவை விரட்டியடித்த நிருபர்கள்

samantha
பல்லாவரப் பெண்:
தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகை என்று சொல்வதைவிட நம்ம பல்லாவர பெண் என்று சொல்வதில்தான் தமிழ் ரசிகர்கள் பெருமை கொள்கிறார்கள். அந்த அளவுக்கு சமந்தாவை இங்குள்ள ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக அவருடைய விவாகரத்துக்கு பிறகு தான் சமந்தா மீது அனைவருக்கும் ஒரு கிரேஸ் உருவாக்கியது.
துணை நடிகையாக அறிமுகம்:
தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார் சமந்தா. அதே படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. தெலுங்கு ரீமேக்கில் திரிஷா நடித்த கேரக்டரில் சமந்தா அங்கு நடித்தார். அந்தப் படம் தெலுங்கிலும் பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதிலிருந்து தெலுங்கு ரசிகர்களும் சமந்தா மீது அன்பை கொட்ட ஆரம்பித்தனர்.
தெலுங்கு சினிமாவில் நம்பர் ஒன் நடிகை:
அதிலிருந்து இன்று வரை தெலுங்கு ரசிகர்களும் சமந்தாவை கொண்டாடி வருகின்றனர். சொல்லப் போனால் தெலுங்கு திரையுலகின் மூலமாகத்தான் சமந்தாவிற்கு ஒரு பெரிய திருப்புமுனையே ஏற்பட்டது. நாகர்ஜூனா குடும்பத்தில் மருமகளாக போகிறார் சமந்தா என்ற செய்தி வெளியானதும் ஒட்டுமொத்த திரையுலக பார்வையும் சமந்தா மீது திரும்பியது. ஏனெனில் நாகார்ஜுனா குடும்பம் தெலுங்கு சினிமா உலகில் ஒரு மிகப்பெரிய அந்தஸ்தை உடைய குடும்பம்.
சர்ச்சைகள்:
நாலாயிரம் கோடி சொத்துக்கு அதிபர் நாகர்ஜுனா .அப்பேர்ப்பட்ட குடும்பத்தில் சமந்தா அதுவும் பல்லாவரப் பெண் மருமகளாக போகிறார் என்றதும் அனைவருக்குமே ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அந்த ஆச்சரியம் சில காலம் மட்டுமே இருந்தன. திருமணம் ஆன இரண்டு வருடங்களுக்குள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அதன் பிறகு சமந்தா மீது பல வித சர்ச்சைகளும் எழுந்தன.
ஒரு பைசா கூட வேண்டாம்:
சொத்தின் மீது ஆசைப்பட்டு தான் சமந்தா நாக சைதன்யாவை திருமணம் செய்தார், ஜீவனாம்சமாக பல கோடிகளை கேட்கத்தான் விவாகரத்து பெற்றார் என்றெல்லாம் செய்திகள் பரவின. ஆனால் ஜீவனாம்சமாக ஒரு பைசா கூட வேண்டாம் என்று சொன்னது தெலுங்கு திரை உலகில் மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியது. அன்றிலிருந்து இன்றுவரை தெலுங்கு ரசிகர்கள் இவர் மீது அதிக மரியாதையை கொட்ட ஆரம்பித்து விட்டனர்.

samantha
திருமண விவாகரத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். அவ்வப்போது உடற்பயிற்சி நிலையத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு தன்னம்பிக்கையும் கொடுத்து வருகிறார் சமந்தா. இந்த நிலையில் இன்று ஹைதராபாத்தில் உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று விட்டு வெளியே வரும் சமந்தாவை நிருபர்கள் துரத்தி துரத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அவரால் நிம்மதியாக போன் கூட பேச முடியவில்லை. இதனால் கடுப்பான சமந்தா பத்திரிகையாளர்களிடம் முகம் சுழித்துவிட்டு காருக்குள் ஏறி சென்றார். அந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது.