Categories: Cinema News

அவன் என்ன பண்ணிட்டான்.! அந்த நடிகர் மீது வீண் பழி போடும் சமந்தா.! வெளியான அதிர்ச்சி வீடியோ..,

இந்த தலைப்பை பார்த்ததும் ஏதும் ஏடாகூடமான செய்தி போல என நினைத்தால் ஏமாற்றமே. ஒரு கலகலப்பான திரைப்படத்தை பற்றிய கலகலப்பான செய்தி என்றே கூறலாம். எந்த வித ஆர்பாட்டமும் இல்லமல்  வெளியாகி தற்போது ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வரும் அந்த வீடியோ காதுவாக்குல ரெண்டு காதல் பட ட்ரைலர் தான்.

நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு,  விக்னேஷ் சிவன் மீண்டும் விஜய் சேதுபதி , நயன்தாராவை வைத்து மீண்டும் ஒரு காதல் கதையை இயக்கி முடித்துள்ளார் விக்னேஷ் சிவன். கூடுதல் சிறப்பாக இந்த படத்தில் சமந்தா இன்னோர் நாயகியாக நடித்துள்ளார்.

 

அப்போ ரெண்டு காதல், ரெண்டு நாயகி. இதுதான் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே அனிருத்தின் துள்ளலான இசையில் இரண்டு பாடல்கள் வெளியாகி சக்கை போடு போட்டுள்ளன.

இதையும் படியுங்களேன் – 21 வருடம் கழித்து விஜயுடன் மீண்டும் ‘அந்த’ நடிகர்.! என்றும் மாறாத நம்ம தளபதி.!

அதனை தொடர்ந்து எந்த வித சத்தமும் இல்லாமல் நேற்று இரவு காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்பட ட்ரைலரை வெளியிட்டுள்ளார். அதில் முதல் வசனமே விஜய் சேதுபதி யாருக்கு என நயனும், சமந்தாவும் போட்டி போட்டு கொள்வது தான். அதில் நயன்தாரா , அவன் என்னை கல்யாணம் பண்ணிட்டேன் என விஜய் சேதுபதி பற்றி கூறவே, அதற்கு சமந்தா, ‘ உன்னை கல்யாணம் பண்ணிட்டான். என்னை பண்ணிட்டான் .’ என்று தயங்காமல் விஜய் சேதுபதி மீது பழி போடுவார்.

இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் காதலிக்கும் விஜய் சேதுபதி என்னென்ன பாடுபடுகிறார் என்பதை மிகவும் கலகலப்பாக காண்பிக்கிறது இந்த ட்ரைலர் . வரும் ஏப்ரல் 28ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இதுவரை 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது இந்த ட்ரைலர் வீடியோ.

Manikandan
Published by
Manikandan