Samantha: ஒரு வேளை ரிலேசன்ஷிப்பில்தான் இருக்காரோ? சமந்தா வீடியோவில் அத கவனிச்சீங்களா?
Samantha: தென்னிந்திய சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழில் பாணா காத்தாடி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான சமந்தா தொடர்ந்து ஈகா, நீதானே பொன்வசந்தம் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றார். தமிழ் மற்றும் தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக மாறினார். பல விருதுகளுக்கு சொந்தக்காரராகவும் மாறினார் சமந்தா.
மாடலிங்கிலும் சிறந்து விளங்கி வருகிறார். தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியிருக்கிறார் சமந்தா.இவருடைய சினிமா வாழ்க்கையில் ஏறுமுகமாக இருந்தாலும் சொந்த வாழ்க்கையில் பல சவால்கள், தோல்விகளை கண்டு இப்போதுதான் அதிலிருந்து விடுபட்டிருக்கிறார். கிட்டத்தட்ட ஐந்து பிலிம்பேர் விருதுகளை வாங்கியிருக்கிறார். மன அழுத்தம், உடல் நலக் குறைபாடுகள் என எல்லாவற்றையும் எதிர்கொண்டு இப்போது மீண்டு வந்திருக்கிறார்.
இவருடைய சொந்த ஊர் சென்னை பல்லாவரம். நடிகைகளில் சரளமாக தமிழ் பேசக் கூடியவர் சமந்தாதான். இவருக்கும் நாக சைதன்யாவுக்கும் இடையே திருமணம் நடந்து அது விவாகரத்தில் முடிந்தது. நாக சைதன்யா இப்போது நடிகை சோபிதாவை திருமணம் செய்திருக்கிறார். ஆனால் சமந்தா இரண்டாவதாக திருமணம் செய்யவில்லை. அவருடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
ஆனால் ஒரு இயக்குனருடன் அவர் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. அடிக்கடி அவர் போனில் பேசிக் கொண்டிருக்கிறார். யாருடன் தான் பேசுவார் என்றெல்லாம் சந்தேகங்கள் ரசிகர்கள் மனதில் இருந்து வருகின்றன. இந்த நிலையில் சமந்தாவின் ஒரு வீடியோ இப்போது இன்ஸ்டாவில் வைரலாகி வருகின்றது. அதில் துபாயில் நடந்த ஒரு ஃபேஷன் நிகழ்ச்சிக்கு சமந்தா சென்றிருக்கிறார்.
அப்போது அவர் யாரோ ஒருவரின் கையை பிடித்தவாறு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். ஆனால் யார் அது என தெரியவில்லை. கூடிய சீக்கிரம் இவர்தான் என்னுடைய வாழ்க்கைத் துணை என சமந்தா காட்டினாலும் காட்டுவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.
இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/DOFy43eEZOu/?igsh=MXJxMWU3anVpOTU2eg==
