பல வருடங்களுக்கு பின் இந்தியா வந்த சங்கீதா விஜய்!.. வைரல்… போட்டோ!..
Sangeetha Vijay: நடிகர் விஜயின் ரசிகையாக இருந்து அவரையே திருமணம் செய்து கொண்டவர் சங்கீதா. இவரின் பூர்வீகம் இலங்கை என்றாலும் பெற்றோருடன் லண்டனில் வசித்து வந்தார். ஒருமுறை விஜயை பார்ப்பதற்காக ஒரு ரசிகையாக அவரின் வீட்டுக்கு வந்தபோது அவரைப் பற்றி விசாரித்த விஜயின் அப்பாவும், அம்மாவும் அவரை விஜய்க்கு திருமணம் செய்து வைத்தார்கள். இரண்டு குழந்தைகள்.. அழகான குடும்பம் என நன்றாகவே போனது. திருமணத்திற்கு பின் விஜயின் வெற்றிக்கு காரணமாகவும் சங்கீதா இருந்தார். அன்பான அமைதியான மனைவியாக குடும்பத்தை கவனித்துக் கொண்டார் சங்கீதா.
விஜய் படம் தொடர்பான விழாக்களில் தொடர்ந்து விஜய்யுடன் பங்கேற்று வந்தார். ஆனால் கடந்த சில வருடங்களாக அவர் விஜயுடன் வசிக்கவில்லை. இப்போது சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் விஜய் தனியாகவே வசிக்கிறார். சங்கீதாவோ தனது மகன் மற்றும் மகளுடன் லண்டனில் உள்ள தனது அப்பாவின் வீட்டில் வசித்து வருகிறார். எனவே விஜயும் சங்கீதாவும் பிரிந்து விட்டனர்.. இருவரும் ஒன்றாக இல்லை என பலரும் பேசி வருகிறார்கள்.. இதுபற்றி சங்கீதாவோ, விஜயோ எங்கும் பேசுவதில்லை.
விஜயின் அப்பா எஸ்.ஏ.சி பேட்டி கொடுத்தால் கூட இதுபற்றி கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல் தவிர்த்து விடுகிறார். ஒரு பக்கம் விஜயை நடிகை திரிஷாவோடு தொடர்புபடுத்தி பல வதந்திகளும் உலவி வருகிறது. விஜய்க்கும் சங்கீதாவுக்கும் இடையே என்ன பிரச்சனை? எதனால் அவர்கள் பிரிந்து வாழ்கிறார்கள்? அவர்கள் நிரந்தரமாக பிரிந்து விட்டார்களா இல்லை இது தற்காலிக பிரிவா? என்பது பற்றிய எந்த கேள்விக்கும் பதில் யாருக்கும் தெரியவில்லை..
இந்நிலையில், இந்தியா பக்கம் எட்டி பார்க்காமல் கடந்த பல வருடங்களாகவே லண்டனில் வசித்து வந்த சங்கீதா பல வருடங்களுக்குப் பின் இந்தியா வந்திருக்கிறார். ஏர்போர்ட்டில் அவரும், அவரின் மகன் ஜேசன் சஞ்சையும் நிற்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
