டிடி நெக்ஸ்ட் லெவல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் செமயா இருக்கே!. அட இந்த படத்துல அவரும் இருக்காரா!...
DD Next Level: விஜய் டிவியில் லொள்ளு சபா உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் நடித்து வந்தவர் சந்தானம். சிம்பு இயக்கிய மன்மதன் படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் பல வருடங்கள் பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்கள் சந்தானத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
நடிகர் சந்தானம்: அந்த படங்களில் சந்தானம் பேசிய வசனங்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஆனால், அப்படியிருந்த சந்தானம் திடீரென இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அப்படி அவர் நடித்து வெளியான படங்கள் எதுவும் சூப்பர் ஹிட் அடிக்கவில்லை.
ராம் பாலாவின் இயக்கத்தில் நடித்த தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 ஆகிய படங்கள் மட்டுமே ஹிட் அடித்தது. ஆனாலும், ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்பதில் சந்தானம் உறுதியாக இருக்கிறார். கோலிவுட்டில் இப்போது காமெடி வறட்சி நிலவும் நிலையில் சந்தானம் மீண்டும் காமெடி செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அதிலும் சமீபத்தில் வெளியான மதகஜராஜா படம் பொங்கலுக்கு வந்த படங்களில் சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள சந்தானத்தின் காமெடிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. எனவே, மீண்டும் சந்தானம் நகைச்சுவை நடிகராக நடிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், சந்தானம் நடித்து வரும் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு டிடி ரிட்டன்ஸ் படம் வெளியாகி ஹிட் அடித்ததால் இப்போது டிடி நெக்ஸ்ட் லெவல் உருவாகியுள்ளது.
கவுதம் மேனன்: டிடி ரிட்டன்ஸ் படத்தை இயக்கிய அதே பிரேம் ஆனந்தே இந்த படத்தையும் இயக்கியுள்ளார். சந்தானத்திற்கு காமெடி படம் ஹிட் அடிக்கும் என்பதை நம்பி இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த படத்தில் இயக்குனர் கவுதம் மேனனும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இன்று சந்தானத்தின் பிறந்தநாள் என்பதால் இந்த போஸ்டரை வெளியிட்டிருக்கிறது படக்குழு. இந்த படம் வருகிற மே மாதம் வெளியாகவுள்ளது.