இப்படி டீல்ல விட்டாரே!.. சிம்புவை நம்பி எல்லாம் போச்சே!.. புலம்பும் சந்தானம்..

by MURUGAN |
இப்படி டீல்ல விட்டாரே!.. சிம்புவை நம்பி எல்லாம் போச்சே!.. புலம்பும் சந்தானம்..
X

Actor Santhanam: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் சந்தானம். அதன்பின் மன்மதன் படத்தில் சந்தானத்திற்கு வாய்ப்பு கொடுத்தார் சிம்பு. அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார் சந்தானம்.

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்கள் சந்தானத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. எனவே, சிம்பு, ஆர்யா, ஜீவா, கார்த்தி, சூர்யா, விஷால் போன்ற இளம் ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் சந்தானம்தான் காமெடி என்கிற நிலை உருவானது. இதுபோக விஜய், அஜித் படங்களிலும் நடித்தார்.

காமெடியனாக நன்றாக போய்க்கொண்டிருந்தபோது இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என முடிவு செய்தார். ஆனால், அப்படி 10 படங்களுக்கு மேல் நடித்தும் சந்தானத்தால் ஒரு முன்னணி ஹீரோவாக மாறமுடியவில்லை. ஏனெனில், சந்தானத்தை ஹீரோவாக ரசிகர்கள் ஏற்கவில்லை. தில்லுக்கு துட்டு போன்ற ஹாரர் காமெடி படங்கள் மட்டும் ஓடியது.


ஆனாலும், நடித்தால் ஹீரோ என்கிற முடிவிலேயே இருந்தார். இந்நிலையில்தான் சிம்புவின் 49வது படத்தில் சந்தானம் நடிக்க ஒப்புகொண்டார். தன்னை சினிமாவில் அறிமுகம் செய்தவர் என்பதால் இந்த படத்தில் நடிக்க ஒப்புகொக்ண்டார். இந்த படத்தில் நடிப்பதற்காக ஏற்கனவே அவர் நடிக்க ஒப்புக்கொண்ட தயாரிப்பாளர்களிடம் பேசி அவர்களின் சம்மதிக்க வைத்ததாகவும் சொன்னார் சந்தானம்.

குட் நைட் பட இயக்குனர் ராம்குமார் இப்படத்தை இயக்கவதாக இருந்தது. ஒரு கல்லூரியில் நடக்கும் கதை என சொல்லப்பட்டது. ஆனால், சில காரணங்களால் இந்த படம் டேக் ஆப் ஆகவில்லை. எனவே, சிம்பு வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கப்போய்விட்டார். இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்கிவிட்டார்கள். சிம்புவை நம்பி மற்ற படங்களின் தேதியை இதற்கு கொடுத்தால் இப்போது இப்படி ஆகிவிட்டதே என சந்தானம் அப்செட்டில் இருக்கிறாராம்.

Next Story