தெரிஞ்சா அப்பவே உஷார் பண்ணியிருப்பேன்.. சமந்தா - சந்தானத்திற்கு இப்படியொரு ப்ளாஷ்பேக்கா?

by ROHINI |
samantha
X

samantha

தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சமந்தா. தமிழில் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் கதாநாயகியாக அறிமுகமானவர். அதற்கு முன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் துணை நடிகையாக நடித்திருப்பார். அதே விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கில் ரீமேக் ஆகும் போது தெலுங்கில் ஹீரோயினாக நடித்தது சமந்தா தான்.

சென்னையில் உள்ள பல்லாவரம் தான் அவருடைய ஏரியா. அதனால் அவரை பல்லாவர பொண்ணு என்று தான் ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள். இங்கு பல்லாவரத்தில் பிறந்தவரா இன்று ஒரு பேன் இந்தியா நடிகையாக மாறி இருக்கிறார் என அவரைப் பார்த்து ஆச்சரியப்படுபவர்களும் ஏராளம். குறிப்பாக சென்னைவாசிகள் அவரை கையில் வைத்து தாங்குகிறார்கள்.

அந்த அளவுக்கு சென்னையில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் அவருக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். இதில் அவருடைய திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனையும் அவர் மீது கூடுதல் அக்கறை கொள்ள காரணமாக இருந்தது. திருமண விவாகரத்துக்கு பிறகு காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் அவர் நடித்தார். அந்த படம் பெரிய அளவில் அவருக்கு வரவேற்பை கொடுத்தது.

அதற்கு முன் புஷ்பா படத்தில் அவர் ஆடிய ஆட்டம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அதிலிருந்து இப்பொழுது தொடர்ந்து லைம் லைட்டில் இருந்து வருகிறார் சமந்தா. அதோடு அவருக்கு உடல் நிலையில் ஏற்பட்ட பிரச்சனை என ரசிகர்கள் அவருக்காக அழாத நாட்களே கிடையாது. இந்த நிலையில் சமந்தா சந்தானம் ஆகியோர் பேசிய ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது.

பழைய பேட்டி ஒன்றில் சந்தானத்தை பற்றி பேசும்பொழுது ‘நண்பர்களுடன் சேர்ந்து எங்க ஏரியா பக்கத்தில் தான் சுற்றிக் கொண்டிருப்பார் . போற வர பெண்களை எல்லாம் சைட் அடிப்பார்’ என சமந்தா கூறியிருந்தார் .இப்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் இதைப் பற்றி கேட்ட பொழுது சந்தானம் கூறியது என்னவெனில் எனக்கும் அந்த ஏரியா தான். நானும் சமந்தாவும் ஒரு தடவை பேசும் பொழுது தான் இதைச் சொன்னார்.

நான் அந்த ஏரியாவில் தான் என் நண்பர்களுடன் சேர்ந்து சைட் அடிச்சுக்கிட்டு இருப்பேன். அப்பவே தெரிஞ்சிருந்தா உஷார் பண்ணி இருப்பேன். இப்ப அவங்க எப்படி வளர்ந்துட்டாங்க. கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. இருந்தாலும் இதெல்லாம் இப்ப சொல்லக்கூடாது .எனக்கும் பேமிலி இருக்கு. பார்த்துகிட்டு இருப்பாங்க .அவங்களுக்கும் இருக்கு என ஜாலியாக பேசினார் சந்தானம்.

Next Story