எப்படிலாம் யோசிச்சு அடிக்குறாங்க? 3BHK படத்தின் கனவு இல்லத்தை பந்தாடிய நெட்டிசன்கள்

3bhk
ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சரத்குமார், சித்தார்த், தேவயானி ஆகியோரின் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் 3 பி ஹெச் கே. சராசரி மனிதனாக ஒவ்வொருவருக்கும் இருக்கும் கனவு எப்படியாவது சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதுதான். மாத வருமானம் பெறும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சொந்த வீடு பற்றிய கனவு இருக்கத்தான் செய்யும். எவ்வளவு நாள் தான் வாடகை வீட்டிலேயே இருக்கிறது .எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் சரி போராட்டமாக இருந்தாலும் சரி அந்த போராட்டங்களுக்கு மத்தியில் எப்படியாவது ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்றுதான் அனைவரும் நினைப்பார்கள்.
அப்படிப்பட்ட ஒரு படமாக தான் இந்த 3 bhk திரைப்படம் அமைந்திருக்கிறது. தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சரத்குமார் தன்னுடைய மனைவி தேவயானி மகன் சித்தார்த், மகள் மேத்தா ரகுநாத் ஆகியோருடன் ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார். மூன்று படுக்கையறை கொண்ட சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதுதான் சரத் குமாரின் நீண்ட நாள் கனவாக இருக்கிறது. எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் செலவுகளை மீறி சேமிக்க முடியாத வகையாக அவருடைய வாழ்க்கையில் போராட்டமாகவே இருக்கிறது .
இதை அடுத்து தந்தையின் கனவை எப்படியாவது நிறைவேற்றும் முயற்சியில் சித்தார்த்தும் மீத்தா ரகுநாத்தும் களமிறங்குகிறார்கள். இருவரும் உழைத்து பணம் சேமிக்கிறார்கள். ஆனால் சேமிக்கும் பணம் ஏதோ ஒரு சூழ்நிலையில் செலவாகி போகிறது .அதனால் அப்பாவின் கனவை நிறைவேற்றினார்களா இல்லையா என்பது தான் படத்தின் மீதி கதை. இதில் சரத்குமாரின் எதார்த்தமான நடிப்பு அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது .அவருக்கு இணையான நடிப்பை வழங்கி இருக்கிறார் தேவயானி. இந்தியன் 2 படம் வரைக்கும் சித்தார்த்தை கழுவி ஊற்றிய ரசிகர்கள் இந்த படத்தில் அவரின் நடிப்பை பாராட்டி வருகிறார்கள்.
அதனால் படம் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனத்தையே பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தை பற்றி வழக்கம்போல நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வச்சு செய்து வருகின்றனர். இந்த படத்தின் கதை சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதுதான். ஆனால் பொதுவாக பார்க்கும் பொழுது ஒரு வீடு வாங்குகிறோம் அல்லது ஒரு நிலத்தை வாங்கி வீடு கட்டுகிறோம் என்றால் அதற்கான செலவு போக ஜிஎஸ்டி என்பதுதான் நம் கண் முன்னே வந்து அச்சுறுத்துகிறது.
ஜிஎஸ்டி எனும் போது நம் நினைவுக்கு முதலில் வருபவர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம். ஒவ்வொரு ஆண்டும் அவர் பட்ஜெட் போடும்போது அனைவருமே திக் திக் பயத்துடன் தான் இருப்பார்கள் .எதை விலை உயர்த்தி இருக்கிறார் எதை விலையை குறைத்து இருக்கிறார் என்பதை பார்க்க ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும் காத்திருப்பார்கள். அப்படி ஒரு வீடு வாங்க வேண்டும் என்று நீங்க நினைச்சா மட்டும் போதாது நான் நினைக்க வேண்டும் என நிர்மலா சீதாராம் கூறியதைப் போல காமெடியாக அந்த வீடியோவை நெட்டிசன்கள் வைரல் ஆக்கி வருகின்றனர் .அதுதான் இப்போது சோஷியல் மீடியாக்களில் டிரெண்டாகி வருகின்றது.